Header Logo
SLIC
உலகம்
சேம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வன்முறை: பிரான்ஸில் 400 பேர் கைது

May 31, 2026 - 02:37 PM

சேம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வன்முறை: பிரான்ஸில் 400 பேர் கைது
Mobitel Inner 1278
EDEX Inner

சேம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் ஆர்செனல் அணியை வீழ்த்தி, பிரான்ஸின் பிஎஸ்ஜி (பாரீஸ் ஜெயண்ட் ஜெர்மன்) அணியினர் வென்றதால், இரு அணியின் ரசிகர்களும் இடையே மோதல் வெடித்தது. 

ஹங்கேரியில் நடைபெற்ற சேம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் 1-1 என சமநிலையில் முடிய, பெனால்டி வாய்ப்பில் பிஎஸ்ஜி அணி 4-3 என வென்றது. தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக பிஎஸ்ஜி அணி கிண்ணம் வென்றுள்ளது. 

இந்தக் கொண்டாட்டத்தின் போது இரு அணிகளின் ரசிகர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. பிரான்ஸ் நாட்டில் நடந்த வன்முறையில் 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்தக் கொண்டாட்டத்தில் நெருப்பு பற்றவைக்கப்பட்ட வாகனங்களால் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 காவல்துறையினர் காயமடைந்ததும் கவனிக்கத்தக்கது. 

போட்டிக்கு முன்னதாகவே, பொலிஸாருக்கும் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தில் 6 வாகனங்கள், 2 பேருந்துகள், 2 தற்காலிக வணிக கட்டமைப்புகள் சேதமடைந்ததாக அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

மொத்தமாக 416 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரீஸில் மட்டுமே 280 பேர் கைதாகியுள்ளார்கள். 

கடந்த சீசனில் நடந்த கொண்டாட்டத்தில் 17 வயது சிறுவன் உள்பட இருவர் மரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278