Header Logo
SLIC
உலகம்
கால்பந்து வெற்றிக் கொண்டாட்டங்களில் வெடித்த வன்முறை!

Jun 1, 2026 - 10:44 AM

கால்பந்து வெற்றிக் கொண்டாட்டங்களில் வெடித்த வன்முறை!
Mobitel Inner 1278
EDEX Inner

ஐரோப்பாவின் கால்பந்து தொடரான சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி கடந்த 30 ஆம் திகதி இரவு நடைபெற்றது. இதில் இங்கிலாந்தின் ஆர்செனல் அணியும், பிரான்சின் பிஎஸ்ஜி அணியும் மோதின. 

ஆட்டத்தின் முதல் பாதியில் ஆர்செனல் 1-0 என முன்னிலை வகித்தது. போட்டியின் 64 ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் டெம்பெலே கோல் அடித்து 1 - 1 என சமன் செய்தார். இறுதியில் பிஎஸ்ஜி அணி 4 - 3 என வெற்றி பெற்றது. 

பிரான்ஸ் முழுவதும் பிஎஸ்ஜி ரசிகர்கள் வீதிகளில் திரண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் அராஜகத்தில் ஈடுபட்டனர். 

குறிப்பாக தலைநகர் பாரீசில் புகழ்பெற்ற 'சாம்ப்ஸ்-எலிசிஸ்' வீதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். 

அப்போது ரசிகர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் வெடித்தது. கூட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர். 

இதை தொடர்ந்து கலவரம் வெடிக்க, பைக்குகள் வீதியில் வைத்து எரிக்கப்பட்டன. கடைகளின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. 

இந்த கலவரங்களால் பாரிஸில் பஸ் மற்றும் ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டின. 

இன்று அதிகாலை வரை பிரான்ஸ் முழுவதும் 416 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பாரிஸில் மட்டுமே 280 பேர் அடங்குவர். வன்முறையில் 7 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278