Header Logo

விளையாட்டு
ஒரே சீசனில் 5 விருதுகள் வென்ற முதல் வீரர்!

Jun 1, 2026 - 01:05 PM -

0

ஒரே சீசனில் 5 விருதுகள் வென்ற முதல் வீரர்!

வைபவ் சூர்யவன்ஷிக்கு ஐபிஎல் 2026 சீசன் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது. அவர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற தவறியிருந்தாலும், தொடரின் மிகப்பெரிய நட்சத்திரமாக சூர்யவன்ஷி உருவெடுத்தார். 15 வயதான அவர், ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் 5 முக்கிய தனிநபர் விருதுகளை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

இந்த சீசனில் அவர், சிறந்த வளர்ந்து வரும் வீரர் (Emerging Player), சூப்பர் ஸ்டிரைக்கர் (Super Striker), சூப்பர் சிக்ஸஸ் (Super Sixes), ஆரஞ்சு கேப் (Orange Cap), அதிக மதிப்பு மிக்க வீரர் (MVP) என ஐந்து முக்கிய விருதுகளையும் கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். 

16 இன்னிங்ஸ்களில் 776 ஓட்டங்களை குவித்த சூர்யவன்ஷி, 237.30 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். மேலும், இந்த சீசனில் 72 சிக்ஸர்கள் விளாசி, கிறிஸ் கெய்ல் வைத்திருந்த 59 சிக்ஸர்கள் என்ற சாதனையை முறியடித்தார். 

சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் அறிமுகமாகாத (Uncapped) வீரராக இருந்தபோதும், ஒரே ஐபிஎல் சீசனில் இரண்டு சதங்கள் அடித்த முதல் துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை சூர்யவன்ஷி படைத்துள்ளார். மேலும், ஜெய்ஸ்வால் வைத்திருந்த, அன்கேப்ட் வீரர் ஒருவரின் அதிகபட்ச சீசன் ஓட்டங்கள் சாதனையையும் முறியடித்துள்ளார். 

ஐதராபாத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் வெறும் 16 பந்துகளில் அரைசதம் அடித்து, ஐபிஎல் பிளே-ஆப் வரலாற்றில் சுரேஷ் ரெய்னாவின் அதிவேக அரைசத சாதனையை சமன் செய்தார். அதே அணிக்கு எதிராக 36 பந்துகளில் சதம் அடித்து, ஐபிஎல் வரலாற்றின் மூன்றாவது அதிவேக சதத்தையும் பதிவு செய்தார். மேலும், இரண்டாவது அதிவேக சத சாதனையும் அவரது பெயரிலேயே உள்ளது. 

குவாலிபையர் 2 இல் போட்டியில் மேலும் ஒரு வரலாற்று சாதனையை சூர்யவன்ஷி நிகழ்த்தினார். ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் 1,000 ஓட்டங்களை கடந்த வீரர் மற்றும் மிகக் குறைந்த பந்துகளில் அந்த இலக்கை எட்டிய வீரர் என்ற இரட்டை சாதனையை படைத்தார். 

வெறும் 440 பந்துகளில் 1,000 ஓட்டங்களை கடந்த அவர், ஆண்ட்ரே ரஸல் வைத்திருந்த 545 பந்துகள் என்ற முந்தைய சாதனையை முறியடித்தார். 

இந்த சீசனில் அவர் எடுத்த 776 ஓட்டங்களில் 521 ஓட்டங்கள் பவர்பிளேயின் முதல் 6 ஓவர்களிலேயே வந்தவை. ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் பவர்பிளேயில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும்.


MOST READ

காணொளி
செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

title