Header Logo
Mogo Academy

விளையாட்டு
உடற்தகுதியை நிரூபிக்க ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யாவுக்கு அழைப்பு!

Jun 3, 2026 - 02:09 PM -

0

உடற்தகுதியை நிரூபிக்க ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யாவுக்கு அழைப்பு!
Mobitel inner

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. ஒருநாள் தொடருக்கான அணியில் ஹர்திக் பாண்ட்யா, ரோகித் சர்மா உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர். 

இருவரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினர். அப்போது சில போட்டிகளில் காயம் காரணமாக இருவரும் விளையாடவில்லை. 

ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடர் ஜூன் 13 ஆம் திகதி தொடங்கும் நிலையில், இருவரையும் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்திற்கு வருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

உடற்தகுதியை நிரூபித்தால் மட்டுமே இருவரும் ஆப்கானிஸ்தான் தொடரில் விளையாட முடியும் என பிசிசிஐ ஏற்கனவே தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா பெங்களூரு சென்று சிறப்பு மையத்தில் உடற்தகுதியை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ரோகித் சர்மா செல்வாரா? என்பது குறித்த எந்த அப்டேட்டும் இல்லை.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara