Header Logo
Mogo Academy

விளையாட்டு
ஆப்கானிஸ்தான் உடனான ஒருநாள் தொடர்!

Jun 5, 2026 - 12:18 PM -

0

ஆப்கானிஸ்தான் உடனான ஒருநாள் தொடர்!
Mobitel inner

உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் விராட் கோலி. டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற அவர், ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். 

இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார். தொடையில் ஏற்பட்ட காயத்தால் அவர் விலகி இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

சமீபத்தில் முடிந்த ஐ.பி.எல். தொடரில் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள முக்கிய பங்கு வகித்தார். அவர் 16 போட்டிகளில் 1 சதம், 5 அரை சதத்துடன் 675 ஓட்டங்களை எடுத்தார். 

காயம் காரணமாக அவர் போட்டியை தவறவிடுவது மிகவும் அரிதானது. ஏற்கனவே, ரோகித் சர்மா உடல் தகுதியுடன் இல்லை. முழு உடல் தகுதி பெற்றால் மட்டுமே அவர் ஆப்கானிஸ்தான் போட்டியில் ஆடுவார். 

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 13 ஆம் திகதி தர்மசாலாவில் ஆரம்பமாகிறது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara