Jun 6, 2026 - 12:29 PM -
0
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக வௌியாகியுள்ளது.
சூர்யாவுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய டி20 அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத்தை இந்தியா வென்றிருந்தாலும், அணி தலைவராக சூர்யகுமாரின் தனிப்பட்ட துடுப்பாட்டம் மிகவும் ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
35 வயதான சூர்யகுமார், அந்த உலகக் கிண்ண தொடரில் அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் மட்டுமே அரைசதம் கடந்தார். 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ண இலக்கை நோக்கி இந்திய அணி தயாராகி வரும் நிலையில், சூர்யகுமார் அணியிலிருந்தே முழுமையாக நீக்கப்பட்டு இருக்கிறது.
தொடர்ந்து துடுப்பாட்டத்தில் சொதப்பி வரும் அவருக்கு, நீண்ட இடைவெளிக்குப் பிறகும் பழைய ஃபார்ம் கிடைக்கவில்லை என்பது விவாதத்திற்குரியதாக மாறியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது விதிவிலக்காக அமைந்தது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்று (06) நடைபெறவுள்ள அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணித் தேர்வு கூட்டத்தில் வெளியாக உள்ளது.
ஒருவேளை அணி தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டால், அது இந்திய அணிக்காக சூர்யகுமார் விளையாடும் கடைசிப் போட்டியாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

