Header Logo

விளையாட்டு
ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பின் நிகழ்ந்த பயங்கர விபத்து!

Jun 6, 2026 - 02:33 PM -

0

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பின் நிகழ்ந்த பயங்கர விபத்து!

அவுஸ்திரேலியாவின் முன்னாள் அணி தலைவரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான மைக்கேல் கிளார்க், இந்தியாவில் ஏற்பட்ட பயங்கர கார் விபத்தில் நூலிழையில் உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2026 இறுதிப்போட்டிக்குப் பிறகு விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார். 

சமீபத்திய கிரிக்கெட் போட்காஸ்டில் பேசிய கிளார்க், ஐபிஎல் இறுதிப்போட்டி முடிந்த பிறகு அவுஸ்திரேலியா திரும்புவதற்காக காரில் விமான நிலையம் நோக்கி பயணித்ததாக தெரிவித்தார். போட்டி முடிந்த களைப்பால் காரின் பின்புறம் தூங்கிக் கொண்டிருந்த அவர், திடீரென ஏற்பட்ட பெரும் மோதல் சத்தத்தால் கண்விழித்ததாக கூறினார். 

கண்விழித்துப் பார்த்தபோது, தாங்கள் பயணித்த காரின் முன்பகுதி லாரியின் பின்பகுதிக்குக் கீழ் சிக்கி நசுங்கியிருந்ததாக கிளார்க் கூறினார். முன்னால் சென்ற லாரியின் பிரேக் விளக்குகள் சரியாக எரியாததால், கார் டிரைவரால் லாரி வேகத்தைக் குறைத்ததை கவனிக்க முடியாமல் போயிருக்கலாம் என அவர் கூறினார். இந்த மோதலில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். 

இந்த விபத்தில் தனக்கு பெரிய காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும், லேசான காயங்களுடன் தப்பியதாகவும் கிளார்க் கூறினார். ஆனால், டிரைவருக்கு கால் முறிவு ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். 

இந்த சம்பவத்திற்குப் பிறகு தனக்கு உதவிய இந்திய மக்களுக்கும் பிசிசிஐ அதிகாரிகளுக்கும் கிளார்க் நன்றி தெரிவித்துள்ளார். இந்திய மக்களின் அன்பும், உடனடி உதவியும் காரணமாகவே பாதுகாப்பாக அவுஸ்திரேலியாவிற்கு திரும்ப முடிந்தது என கிளார்க் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


MOST READ

காணொளி
வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

title