Header Logo
Mogo Academy

விளையாட்டு
ஆராய்ச்சி பாடமாய் மாறிய வைபவ் சூர்யவன்ஷி!

Jun 6, 2026 - 03:35 PM -

0

ஆராய்ச்சி பாடமாய் மாறிய வைபவ் சூர்யவன்ஷி!
Mobitel inner

15 வயதில் உலகையே வியக்கவைக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் சாதனை குறித்த ஆராய்ச்சித் திட்டத்தை இந்தூர் ஐஐஎம் முன்னெடுத்துள்ளது. 

நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி சிக்ஸர் மழை பொழிந்த வைபவ் சூர்யவன்ஷி, 72 சிக்ஸர் விளாசி ஒரு சீசனின் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். புகழ்பெற்ற அனுபவமிக்க சர்வதேச வீரர்கள் பலர் விளையாடிய இத்தொடரில் அதிக ரன்கள் விளாசியவராகவும் 776 ஓட்டங்களுடன் சூர்யவன்ஷியே முதலிடம் பெற்றார். 

அதேபோல இன்றைய நவீன கிரிக்கெட்டில் முக்கியமானதாக கருதப்படும் ஸ்ட்ரைக் ரேட் பாயிண்டுகளிலும் சுமார் 237 புள்ளிகளுடன் இவரே முதலிடத்தை பிடித்தார். இப்படி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இவர் குறித்து ஆச்சரியப் பார்வை பார்த்துவரும் நிலையில் சூர்யவன்ஷியின் சாதனை குறித்த 3 மாத ஆராய்ச்சித் திட்டத்தை இந்தூர் ஐஐஎம் முன்னெடுத்துள்ளது. 

அதன்படி இவரது அசாதாரணமான செயல்திறனுக்கு என்னென்ன அம்சங்கள் காரணங்களான அமைந்துள்ளன என முழுமையான பகுப்பாய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இதில், விளையாட்டு, உளவியல் மற்றும் மேலாண்மை வல்லுநர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த விரிவான ஆய்வுக் கட்டுரை, உலகின் முன்னணி ஆய்விதழ்களுக்கு அனுப்பப்படும். 

வளர்ந்து வரும் வீரர்களுக்கு மனநலம் மற்றும் பயிற்சிசார் கொள்கைகளை வடிவமைக்க உதவும் வகையில், பிசிசிஐயிடம் நேரடியாக இது பகிர்ந்துகொள்ளப்படும் என்று இந்திய மேலாண் கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளனர்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara