Jun 6, 2026 - 10:34 PM -
0
அங்குருவாதொட்ட பகுதியில் அமைந்துள்ள “மவ்பிய செவன” பராமரிப்பு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த மேலும் ஆறு பேரின் பிரேத பரிசோதனைகளை நடத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது.
இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்கு அவர்களது உறவினர்கள் எவரும் இதுவரை வராததே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறவினர்களின் வருகையை எதிர்பார்த்து, அந்த உடல்களை களுத்துறை, நாகொட கல்லேஸ்ஸ மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலையின் குளிரூட்டிகளில் வைப்பதற்கு இன்று (06) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட மற்றுமொரு நபரின் உடல் இன்று முணகம பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

