Header Logo
Mogo Academy

சினிமா
பிரபல நடிகர் சலீம் குமார் காலமானார்

Jun 7, 2026 - 10:32 AM -

0

பிரபல நடிகர் சலீம் குமார் காலமானார்
Mobitel inner

தேசிய விருது பெற்ற பிரபல மலையாள நடிகரும், இயக்குநரும், நகைச்சுவை மன்னனுமான சலீம் குமார் (56), உடல்நலக் குறைவால் கொச்சியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் காலமானார்.


காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூன் 6, 2026) இரவு 10.43 மணியளவில் காலமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


மிமிக்ரி கலைஞராகத் தனது கலைப்பயணத்தைத் தொடங்கிய சலீம் குமார், 1990-களின் பிற்பகுதியில் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார்.


கடந்த மூன்று தசாப்தங்களாக 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மலையாளத் திரையுலகின் தவிர்க்க முடியாத ஒரு முகமாக மாறினார்.


2010-ஆம் ஆண்டு வெளியான 'ஆதாமின்றெ மகன் அபூ' திரைப்படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது மற்றும் கேரள மாநில அரசு விருது கிடைத்தது. மேலும், 'அச்சனுறங்காத வீடு' திரைப்படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான மாநில விருதையும் பெற்றுள்ளார்.

 

அவரது மறைவுச் செய்தி அறிந்ததும் மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், ஜெயராம் உள்ளிட்ட மலையாளத் திரையுலகின் முன்னணி பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.


"மலையாள மக்களைத் தனது நகைச்சுவையால் சிரிக்க வைத்ததோடு மட்டுமன்றி, அழுத்தமான கதாபாத்திரங்கள் மூலம் சிந்திக்கவும் வைத்த ஒரு மிகச்சிறந்த கலைஞனைத் திரையுலகம் இழந்துவிட்டது" என்று திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.


அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளன.


MOST READ

காணொளி
மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Mobitel Upahara