Header Logo
Mogo Academy

விளையாட்டு
ஈரான் கால்பந்தாட்ட அணி மெக்சிகோவில்!

Jun 7, 2026 - 10:07 PM -

0

ஈரான் கால்பந்தாட்ட அணி மெக்சிகோவில்!
Mobitel inner

இந்த மாத இறுதியில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள மூன்று குழுநிலை போட்டிகளுக்கு முன்னதாக, உலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சிகளுக்காக ஈரானிய கால்பந்தாட்ட அணி மெக்சிகோவை சென்றடைந்துள்ளது. 

விமானத்திலிருந்து இறங்கிய அணியினர் பாதுகாப்பு சோதனைகளின் பின்னர் திஜுவானா விமான நிலைய நுழைவாயிலில் இருந்த பேருந்தில் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்த உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் ஈரான் அணி பங்கேற்பது, ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் காரணமாக சிக்கலாக மாறியது. 

முன்னதாக விசா நடைமுறைகளில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, ஈரான் தனது பயிற்சி முகாமை அமெரிக்காவின் அரினோசாவில் உள்ள டக்சன் பகுதியிலிருந்து, கலிபோர்னியா எல்லைக்கு அருகில் உள்ள மெக்சிகோவின் திஜுவானா பகுதிக்கு மாற்ற வேண்டியிருந்தது. 

துருக்கியின் அந்தல்யா நகரில் பயிற்சி பெற்று வந்த இந்த அணி, மத்திய தரைக்கடல் நகரத்து விமான நிலையத்திலிருந்து தனிப்பட்ட ஜெட் விமானம் மூலம் நேரடியாக மெக்சிகோவிற்கு சென்றுள்ளது. 

கடந்த மார்ச் மாதம், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வீரர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியதுடன், ஈரான் இந்தத் தொடரில் பங்கேற்பது பொருத்தமானது என தாம் நினைக்கவில்லை எனவும் கூறிய நிலையில் அது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 

அதற்கு ஈரானின் தேசிய அணி தங்களை விளையாடுவதில் இருந்து யாரும் நீக்க முடியாது என்று கூறி பதில் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara