Header Logo
Mogo Academy

சினிமா
ஜீவனாம்சம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடிய ரவி மோகன்!

Jun 8, 2026 - 03:04 PM -

0

ஜீவனாம்சம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடிய ரவி மோகன்!
Mobitel inner

நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவிக்கும் இடையே விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

குடும்ப நல நீதிமன்றத்தில் உள்ள வழக்கை இரண்டு வாரங்களில் முடிக்க வேண்டும் என்ற உத்தரவை நீடிக்க கோரி நடிகர் ரவி மோகன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவிக்கும் இடையே விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஆர்த்தி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில், ரவி மோகனுக்கு எதிராக ஏப்ரல் 2025 முதல் தனது குழந்தைகளின் பாடசாலைக் கட்டணம் உட்பட எந்தவொரு இடைக்கால ஜீவனாம்சத்தையும் வழங்கவில்லை என புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். 

ஆனால் அந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இடைக்கால ஜீவனாம்ச மனுவை விரைந்து விசாரணை நடத்தி முடிக்க சென்னை குடும்ப நல நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். 

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆர்த்தி ரவி தாக்கல் செய்திருந்த இடைக்கால ஜீவனாம்ச மனுவை இரண்டு வாரத்துக்குள் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. 

இந்த நிலையில் குடும்ப நல நீதிமன்றத்திற்கு விதிக்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று ரவி மோகன் இன்று புதிதாக மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணை வந்தது. அப்போது ஆர்த்திரவி சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி காலக்கெடுவை நீடிக்க கூடாது என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து குடும்ப நல நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

MOST READ

காணொளி
சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

Mobitel Upahara