Header Logo
SLIC
ஜோதிடம்
இந்த திகதிகளில் பிறந்தவர்கள் அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பார்களாம்!

Jun 8, 2026 - 04:58 PM

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பார்களாம்!
Mobitel Inner 1278
EDEX Inner

எண் கணிதத்தின்படி சில திகதிகளில் பிறந்தவர்கள் மென்மையான குணம் கொண்டவர்களாகவும், அதிகப்படியான நம்பகத்தன்மை, இரக்க குணம் மற்றும் தவறான நபர்களை தேர்ந்தெடுக்கும் சுபாவம் கொண்டவர்களாக விளங்குகின்றனர். இதன் காரணமாக அவர்கள் மற்றவர்களால் எளிதில் ஏமாற்றப்படுகின்றனர். இந்த பதிவில் எந்தெந்த திகதிகளில் பிறந்தவர்கள் அதிகமாக நம்பிக்கை துரோகங்களை சந்திக்கிறார்கள் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம். 

அதற்கு முன் நாம் ஒவ்வொருவரின் மூல என்னை கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். ஒருவர் எந்த ஒரு மாதத்திலும் ஒன்று முதல் ஒன்பதாம் திகதியில் பிறந்திருந்தால் அவரது மூல எண் அந்த பிறந்த திகதியே ஆகும். உதாரணமாக ஒருவர் 7ஆம் திகதி பிறந்திருந்தால் அவரது மூல எண் 7 ஆகும். அதே சமயம் 11 முதல் 31 வரையிலான திகதியில் பிறந்தால் அந்த இரண்டு எண்களின் கூடுதலே அவர்களின் மூல எண்ணாகும். உதாரணமாக ஒருவர் 24 ஆம் திகதி பிறந்திருந்தால் அவரது மூல எண் 2+4=6 ஆகும். 

திகதிகள்: 2, 11, 20, 29 (கூட்டு எண் - 2), 

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மனதின் காரகரான சந்திர பகவானால் ஆளப்படுபவர்கள். இவர்கள் இயல்பிலேயே மிகவும் மென்மையானவர்கள், உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் மற்றும் கற்பனைத்திறன் மிக்கவர்கள். இவர்கள் மற்றவர்களை மிக எளிதாக நம்பிவிடுவார்கள். யாராவது கஷ்டம் என்று சொன்னால், யோசிக்காமல் உதவி செய்வார்கள். இவர்களின் இந்த இளகிய மனதை மற்றவர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஏமாற்ற வாய்ப்புகள் அதிகம். 

திகதிகள்: 7, 16, 25 (கூட்டு எண் - 7), 

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் கேது பகவானால் ஆளப்படுகிறார்கள். இந்த எண்களில் பிறந்தவர்கள் ஆன்மீக சிந்தனை, தனிமை மற்றும் ஆழமான சிந்தனை கொண்டவர்கள். இவர்கள் பெரும்பாலும் தங்களின் சொந்த உலகத்திலேயே இருப்பதால், சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை கணிக்கத் தவறிவிடுவார்கள். குறிப்பாக, கூட்டுத் தொழில் அல்லது மிக நெருங்கிய நண்பர்களால் இவர்களுக்கு ஏமாற்றங்கள் வரலாம். 

திகதிகள்: 8, 17, 26 (கூட்டு எண் - 8), 

இந்த திகதிகளை சனி பகவான் ஆட்சி செய்கிறார். மேலும் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் நேர்மையானவர்கள். சனி பகவானின் ஆதிக்கம் கொண்ட இவர்களுக்கு வாழ்க்கை அவ்வளவு எளிதாக அமைந்துவிடுவதில்லை. இவர்கள் பலமுறை போராடி முன்னேற வேண்டியிருக்கும். இவர்களது நேர்மையைப் புரிந்து கொள்ளாமல், இவர்களிடம் உதவி பெற்றவர்களே பின்னாளில் இவங்களுக்கு எதிராகத் திரும்பும் சூழல் உருவாகலாம். 

ராசி மற்றும் லக்னம்: எண் கணிதம் மட்டுமின்றி, ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ஆம் இடங்களின் அதிபதிகள் அல்லது ராகு - கேது சேர்க்கை இருந்தாலும் துரோகங்கள் ஏற்படலாம். 

பிறந்த திகதி நன்றாக இருந்தாலும், ஒருவருடைய பெயரின் கூட்டு எண் பலவீனமாக இருந்தால், அவர்கள் வாழ்வில் அடிக்கடி ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். 

இந்த எண்களில் பிறந்தவர்கள் யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக பண விஷயங்களிலும், ரகசியங்களைப் பகிர்வதிலும் அனைவரிடத்திலும் ஒரு படி தள்ளியே இருப்பது இவர்களுக்கு நல்லது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278