Header Logo

வணிகம்
இலங்கையில் அன்னையரை அரவணைக்கும் மிகச் சிறந்த 10 பணியகங்கள் மத்தியில் DFCC வங்கி அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது

Jun 8, 2026 - 06:36 PM -

0

இலங்கையில் அன்னையரை அரவணைக்கும் மிகச் சிறந்த 10 பணியகங்கள் மத்தியில் DFCC வங்கி அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது

Parenthood Global அமைப்பு அண்மையில் ஏற்பாடு செய்த Mom Leaders Conference 2026 நிகழ்வில் இலங்கையில் அன்னையரை அரவணைக்கும் மிகச் சிறந்த 10 பணியகங்கள் மத்தியில் ஒன்றாக இடம்பிடித்து DFCC வங்கி பிஎல்சி சிறப்பான அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது. பணியாற்றும் அன்னையர்கள் வளர்ச்சி கண்டு, தலைமை தாங்கி, மற்றும் வெற்றி காண்பதற்கு ஆதரவான சூழலைக் கொண்ட பணியகத்தைத் தோற்றுவிப்பதில் வங்கி தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருவதை இது எடுத்துக்காட்டுகின்றது. 

தொழில்ரீதியான வளர்ச்சியையும் தமது குடும்பப் பொறுப்புக்களையும் சமமாக கவனிப்பதற்கு பெண்களுக்கு இடமளிக்கின்ற, அவர்களை அரவணைக்கின்ற மற்றும் ஆதரவளிக்கின்ற பணியக கலாச்சாரத்தை வளர்ப்பதில் DFCC வங்கி மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளை இந்த அங்கீகாரம் பிரதிபலிக்கின்றது. நிறுவனரீதியாக தனது கலாச்சாரத்தின் மையமாக பணியாளர்கள், அவர்களுடைய நல்வாழ்வு மற்றும் சம வாய்ப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவமளிக்கும் தொழில்தருநர் என்ற வங்கியின் ஸ்தானத்தை இது மேலும் வலுப்படுத்துகின்றது. பணியகங்கள் தொடர்ந்தும் மாற்றம் கண்டு வருகின்ற சூழலில், பணியாற்றும் பெற்றோருக்கு ஆதரவளிப்பது அனைவரையும் அரவணைக்கும் வேலைவாய்ப்பில் முக்கியமான அளவுகோலாக மாறியுள்ளது. DFCC வங்கியைப் பொறுத்தவரை ஊழியர்கள் தமது வாழ்விலும், பணியிலும் பல்வேறு கட்டங்களைக் கடக்கும் சமயங்களில் அவர்களுக்கு ஆதரவளித்து, அவர்கள் அர்த்தமுள்ள பங்களிப்புக்களை வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் அது தொடர்ந்தும் கட்டியெழுப்பி வருகின்ற பரந்த சூழலுடன் இந்த அங்கீகாரம் நேரடியாக தொடர்புபட்டுள்ளது. 

DFCC வங்கியின் பிரதம மனித வளங்கள் அதிகாரியான பதும சுபசிங்க அவர்கள் கூறுகையில், “கொள்கை மூலமாக மாத்திரமன்றி, தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலமாகவே அனைவரையும் அரவணைக்கின்ற பணியகம் ஒன்று கட்டியெழுப்பப்படுகின்றது. எமது பணியாளர்களுக்கு அவர்களுடைய வீட்டுப் பொறுப்புக்களை நிர்வகிக்கும் அதேசமயம், தொழில்ரீதியாக வளர்ச்சி காண்பதற்கான வாய்ப்புக்களை வழங்கும் போது அவர்களால் மிகுந்த தன்னம்பிக்கையுடனும், குறிக்கோளுடனும் பங்களிப்பாற்ற முடியும் என்ற காரணத்தால் பணியாற்றும் அன்னையருக்கு ஆதரவளிப்பது வலுவான நிறுவனமொன்றை வளர்க்கும் எமது அணுகுமுறையில் ஒரு அங்கமாகக் காணப்படுகின்றது. வங்கியில் அனைத்துப் பிரிவுகளிலும் இதனை வலுப்படுத்துவதற்கு நாம் உழைத்து வரும் கலாச்சாரத்தை இது பிரதிபலிப்பதால் இந்த அங்கீகாரம் மிகவும் அர்த்தம் நிறைந்ததாக உள்ளது.” 

அர்ப்பணிப்பு, மீள்திறன், மற்றும் பங்களிப்பு ஆகியவற்றுக்கான முன்னுதாரணமாகத் திகழும் அன்னையராகவுள்ள பெண் தலைமைத்துவ அதிகாரிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் தனது ஊழியர்கள் பலருக்கு இம்மாநாட்டு நிகழ்வில் அங்கீகாரமளித்துள்ள DFCC வங்கி அவர்களுடைய சாதனைகளைப் போற்றியுள்ளது. நிபுணி ஹையந்துடுவ, நிவிர்திகா ஜோசெப், வெனுஷ்கா பண்டாரநாயக்க, சிந்துஜா சிவராஜா, நிஷாதி ஜெயசேகர, மலிந்தி தர்மவர்த்தன, திலினிகா ஹெட்டியாராச்சி, இனோகா முத்துசாமி, ஷெரின் பிரியோனா, மற்றும் நிலுஷிகா சந்துராங்கனி ஆகிய ஊழியர்களே அவ்வாறு போற்றிக் கௌரவிக்கப்பட்டனர். 

நிறுவனத்திற்குப் பங்களிப்பாற்றும் அதேசமயம், குடும்ப வாழ்வின் சவால்களை தொடர்ந்து சிறப்பாக நிர்வகித்து வருகின்ற வகையில் DFCC வங்கியில் பெண்கள் ஆற்றுகின்ற வகிபாகத்தை அவர்கள் பெற்றுள்ள அங்கீகாரம் பிரதிபலிக்கின்றது. பெறுபேற்றுத்திறன் தொடர்பில் பாரம்பரியான அளவுகோல்களுக்கு அப்பால், திறமை, அர்ப்பணிப்பு, மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றுக்கு உரிய இடம் அளிக்கின்ற பணியகங்களின் முக்கியத்துவத்தையும் இது மீண்டும் வலியுறுத்துவதாக உள்ளது. 

ஊழியர்கள் தாம் மிகச் சிறப்பாகச் செயற்படுவதற்கு இடமளிக்கும் வகையில் மதிக்கப்படுபவர்களாகவும், ஆதரவளிக்கப்படுபவர்களாகவும், மற்றும் வலுவூட்டப்படுபவர்களாகவும் உணரும் கலாச்சாரமொன்றைக் கட்டியெழுப்புவதில் DFCC வங்கியின் பணியாளர்கள் தொடர்பான மூலோபாயத்தின் கீழ் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அரவணைப்பு, நல்வாழ்வு, தொழில்ரீதியான மேம்பாடு, மற்றும் சம வாய்ப்பு ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கின்ற பணியக நடைமுறைகளை வலுப்படுத்துவதும் இதில் அடங்கியுள்ளது. 

இலங்கையில் அபிவிருத்திக் கடன் வழங்கலில் முன்னோடி என்ற பெயரைச் சம்பாதித்துள்ள DFCC வங்கி, வாடிக்கையாளர்கள் மற்றும் சமூகங்கள் மீது மாத்திரமன்றி, தனது பணியாளர்கள் மீதும் முதலீடுகளை மேற்கொள்ளும் நிறுவன மரபினை தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது. இலங்கையில் அன்னையரை அரவணைக்கும் மிகச் சிறந்த 10 பணியகங்கள் மத்தியில் வங்கி அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளமை நவீன, அனைவரையும் அரவணைக்கின்ற, மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற பணியகத்தைத் தோற்றுவிக்கும் அதன் பயணத்தில் மற்றுமொரு படியாகக் காணப்படுகின்றது.


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு

எங்கள் பிரச்சினைகளை ஏன் கேட்கவில்லை?

எங்கள் பிரச்சினைகளை ஏன் கேட்கவில்லை?

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

title