Header Logo
Mogo Academy

வணிகம்
Eswaran Brothers மாற்றத்தைக் கொண்டுவரும் தலைமைத்துவப் பயணத்தின் மூலம் பெண்களை வலுப்படுத்துகிறது

Jun 9, 2026 - 03:26 PM -

0

Eswaran Brothers மாற்றத்தைக் கொண்டுவரும் தலைமைத்துவப் பயணத்தின் மூலம் பெண்களை வலுப்படுத்துகிறது
Mobitel inner

பெண்களின் அதிகாரமளிப்பை மேம்படுத்துவதற்கும் வலுவான தலைமைத்துவ வரிசையை உருவாக்குவதற்குமான தனது அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இலங்கையின் முன்னணி தேயிலை உற்பத்தியாளரான Eswaran Brothers Exports (EB) தனது முக்கிய மகளிர் தலைமைத்துவ முன்னெடுப்பான She Transforms என்ற, தனிப்பயனாக்கப்பட்ட ஆறு மாத தலைமைத்துவ மேம்பாட்டுப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. விருது பெற்ற தலைமைத்துவ நிபுணர் செனலா ஜெயசூரியாவுடன் இணைந்து உருவாக்கப்பட்டு Value for Women அமைப்பின் ஆதரவுடன் நடைபெறும் இந்தத் திட்டம் தலைமைத்துவ திறன் மேம்பாடு, உள்ளடக்கம் மற்றும் நீண்டகால நிறுவன மாற்றத்தை மையமாகக் கொண்ட நிறுவனத்தின் விரிவான பாலின சமத்துவத் திட்டத்தின் முக்கிய தூணாக அமைகிறது. 

Eswaran Brothers நிறுவன பணியாளர்களில் பெண்கள் 44% ஆக இருந்தாலும் Value for Women அமைப்புடன் இணைந்து மற்றும் நெதர்லாந்து அபிவிருத்தி நிதி வங்கி (FMO) ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப பாலின ஆய்வின் போது மூத்த பதவிகளில் வெறும் 23% மட்டுமே பெண்கள் இருந்தனர். இந்த மதிப்பீடு, அவர்களின் திறன் இருந்தபோதிலும் பல பெண்கள் தெளிவற்ற தொழில் முன்னேற்ற பாதைகள் மற்றும் முக்கிய வாழ்க்கை நிலைகளில் போதுமான அமைப்பு ஆதரவு இல்லாமை போன்ற சவால்களை எதிர்கொண்டதாக கண்டறிந்தது. 

எனவே, Eswaran Brothers பெண்கள் வளர்வதற்கும் தலைமை தாங்குவதற்கும் உள்ள தடைகளை நீக்கி மேலும் உகந்த சூழலை உருவாக்கும் வகையில் வியூக ரீதியான மனப்பான்மை மற்றும் கொள்கைத் தலையீடுகளை அறிமுகப்படுத்தியது. இந்த முயற்சிகளில் வழிகாட்டுதல் வாய்ப்புகள், மகப்பேறு விடுப்பிலிருந்து திரும்பும் ஊழியர்களுக்கான மேம்படுத்தப்பட்ட ஆதரவு, மேலாளர்களுக்கான பயிற்சி, மற்றும் நிறுவனம் முழுவதும் அனைவரையும் உள்ளடக்குதலையும் தொழில் முன்னேற்றத்தையும் வலுப்படுத்தும் நோக்கம் கொண்ட முன்னெடுப்புகள் ஆகியவை அடங்கும். 

இதன்படி, ஆறு மாதங்களுக்குள் 20 பெண்கள் பதவி உயர்வு பெற்றனர். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2.4 மடங்கு அதிகரிப்பை குறிக்கிறது. அத்துடன் ஆண் ஊழியர்களின் பதவி உயர்வும் இரட்டிப்பாக அதிகரித்தது. இது முழு பணியாளர்களுக்கும் பயனளிப்பதை வெளிப்படுத்துகிறது. மேலாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள், பெண் தொழில்முறை ஊழியர்களிடையே நம்பிக்கை, பொறுப்புணர்வு, மூலோபாய சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறன்களில் தெளிவான முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். 

Eswaran Brothers நிறுவனத்தின் மனிதவள மற்றும் சட்டப் பிரிவு குழுமத் தலைவர் நிமாலி செனவிரத்னவின் கூறுகையில் “பெண்கள் தங்கள் பதவிகளையும் தாண்டி தலைமை தாங்கத் தொடங்கினர். அவர்கள் அதிக கவனத்துடனும், குரலுடனும், உறுதியுடனும் தங்களை வெளிப்படுத்தினர்.” 

இந்த முன்னேற்றத்தைத் தொடர்ந்து விரிவுபடுத்துவதற்காக She Transforms தொடங்கப்பட்டது. கட்டமைக்கப்பட்ட 10 படி பயணத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், பங்கேற்பாளர்கள் தங்கள் மீள்திறன், செல்வாக்கு, சுய-தலைமைத்துவம் மற்றும் உணர்ச்சிசார் சுறுசுறுப்பு ஆகியவற்றை வலுப்படுத்த உதவும் வகையில் பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் பயிற்றுவித்தல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. அறிவாற்றல் தலைமைத்துவக் கருவிகள், பாத்திரமேற்று நடித்தல், எல்லைகளை நிர்ணயிக்கும் உத்திகள் மற்றும் நெறிப்படுத்தப்பட்ட குழுச் சிந்தனை ஆகியவற்றின் மூலம், இன்றைய அதிவேக வணிகச் சூழலில் தலைமைத்துவம் மற்றும் உத்திசார் முடிவெடுத்தல் ஆகியவற்றிற்கான நடைமுறை அணுகுமுறைகளைப் பங்கேற்பாளர்கள் ஆராய்ந்தனர். 

செனெலா ஜயசூரியா கூறுகையில் “தலைமை என்பது நீங்கள் கற்றுக்கொள்வது அல்ல. அது நீங்கள் வாழ்ந்து காட்டுவது” என்று கூறினார். மேலும், இந்த திட்டம் தன்னிலைப் பிரதிபலிப்பு, வளர்ச்சி மற்றும் முயற்சி செய்வதற்கான ஆதரவான சூழலை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டது என்றும், இதன் மூலம் பங்கேற்பாளர்கள் தங்களின் வரம்புகளை விதிக்கும் நம்பிக்கைகளை சவால் செய்யவும், நம்பிக்கையை வளர்க்கவும், உண்மையான வேலை அனுபவங்களின் மூலம் தங்களின் தலைமைத் திறன்களை வலுப்படுத்தவும் முடிந்தது என்றும் அவர் கூறினார் பங்கேற்பாளர்கள் கூறுகையில் இது தங்களால் கட்டுப்படுத்தக்கூடியவற்றில் கவனம் செலுத்தவும், அதிகத் தெளிவுடன் முடிவுகளை எடுக்கவும், தங்கள் பணிகளில் அதிக நம்பிக்கையுடன் பங்களிக்கவும் அவர்களுக்கு உதவியதாகக் கூறினர். பலர் நேர மேலாண்மை, பணிகளைப் பகிர்ந்தளித்தல், ஒத்துழைப்பு மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றில் முன்னேற்றங்கள் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர்; அதே நேரத்தில், பாரம்பரியமாக ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த சூழல்களில் திறம்பட ஈடுபடுவதற்கான நம்பிக்கையையும் அவர்கள் பெற்றனர். 

She Transforms என்பது ஒரு திட்டத்தை விட அதிகமாக மாறியுள்ளது. இது முடிவெடுப்பவர்கள், சிக்கல் தீர்ப்பவர்கள் மற்றும் உறுதியான தலைவர்கள் ஆகியோரைக் கொண்ட, எதிர்காலத்துக்கு தயாரான மற்றும் நோக்கமுடைய பணியாளர்களை உருவாக்க உதவுகிறது. இதன் அளவிடக்கூடிய தாக்கம், பெண்களுக்கு தலைமை வாய்ப்புகளை உருவாக்குவதில் Eswaran Brothers நிறுவனத்தின் உறுதிப்பாட்டையும், நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான அதன் முயற்சியையும் பிரதிபலிக்கிறது. 

Value for Women அமைப்பின் ஆலோசனைச் சேவைகளின் இணை இயக்குநரான ரெனி ஹன்டர் கூறுகையில் “நிறுவனங்கள் வெறும் நோக்கங்களைத் தாண்டி, நடைமுறைத் தீர்வுகளைச் செயல்படுத்தும்போது, ​​தலைமைத்துவத்தின் இயக்கவியல் எவ்வளவு விரைவாக மாறக்கூடும் என்பதை விளக்குகிறார். எதிர்பார்ப்புகள், அமைப்புகள் மற்றும் ஆதரவு ஆகியவை வெளிப்படையாக வகுக்கப்படும்போது, ​​பெண்களின் தலைமைத்துவம் புலப்படும்படியாகவும் நீடித்ததாகவும் மாறுகிறது.” 

She Transforms மூலம் Eswaran Brothers நிறுவனம் இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தலைமைத் திறன் மேம்பாடு எவ்வாறு திறமைகளை வெளிக்கொணரவும், நிறுவனத்தின் திறனை வலுப்படுத்தவும் மற்றும் நிலையான மாற்றத்தை உருவாக்கவும் உதவுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த திட்டம் வளர்ச்சியடையும் நிலையில், வணிகத்தின் ஒவ்வொரு நிலைகளிலும் பெண்கள் தலைமை ஏற்கவும், பங்களிக்கவும் மற்றும் வெற்றி பெறவும் அதிகாரம் அளிக்கப்படும் ஒரு இணைந்த பண்பாட்டை உருவாக்குவதில் நிறுவனம் தனது உறுதிப்பாட்டை தொடர்ந்து நிலைநிறுத்துகிறது.


MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara