Header Logo
Mogo Academy

விளையாட்டு
இங்கிலாந்து தொடரில் முக்கிய வீரருக்கு ஓய்வு!

Jun 9, 2026 - 04:39 PM -

0

இங்கிலாந்து தொடரில் முக்கிய வீரருக்கு ஓய்வு!
Mobitel inner

இந்திய கிரிக்கெட் அணி இந்த மாத இறுதியில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக வரும் 26 ஆம் திகதி அயர்லாந்துக்கும் சுற்றுப்பயணம் ஒன்று மேற்கொள்ளவுள்ளது. 

அதனைத் தொடர்ந்து, 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக அடுத்த மாதம் இங்கிலாந்து செல்வதோடு மேலும், 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகிறது. டி20 கிரிக்கெட் தொடர் ஜூலை 1 ஆம் திகதி தொடங்குகிறது. 

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து செல்லும் இந்திய டி20 அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, ஷ்ரேயாஸ் அய்யர் அணி தலைவராகவும், திலக் வர்மா துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

இந்நிலையில், அயர்லாந்து, இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் இருந்து முகமது சிராஜுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா இந்திய அணியில் இணைவார் எனவும் தெரிவித்துள்ளது. 

பிசிசிஐ வைத்தியக் குழுவிற்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையே நடந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, சிராஜுக்கு ஓய்வு அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரவிருக்கும் நீண்ட சர்வதேசப் போட்டித் தொடருக்கு முன், அவர் போதுமான அளவு குணமடைவதை உறுதி செய்வதற்கான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என பிசிசிஐ தெரிவித்தது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara