Jun 10, 2026 - 11:36 AM -
0
"ஆடம்பர வாழ்வின் புதிய முகவரியை வரவேற்க பாலிவுட் பிரபலங்களும் சிறப்பு விருந்தினர்களும் ஒன்றிணைகின்றனர். Central Park Boulevard Port City Colombo அறிமுக விழா."
இலங்கையின் மாபெரும் ரியல் எஸ்டேட் அறிமுகத்திற்கு Home Lands தயாராகி, இந்து சமுத்திரத்தின் அடுத்த அதிசயமாக, Central Park Boulevard Port City Colombo ஐ அறிமுகம் செய்யவுள்ளது. 2026 ஜுன் 12 முதல் 14 வரை “The Grand Launch Weekend” என தலைப்பில் நடைபெறவுள்ள இந்த அறிமுக நிகழ்வு, Cinnamon Life at City of Dreams இன் Lumina Ballroom இல் தொடர் நிகழ்வுகள் பலதைக் கொண்டிருக்கும்.
இப்பரந்த அறிமுக வார இறுதியானது 2026 ஜூன் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை The Night of Emeralds எனும் பிரமாண்ட நிகழ்வுடன் ஆரம்பமாகவுள்ளது. இது சென்ட்ரல் பார்க் பொலிவார்ட் போர்ட் சிட்டி கொழும்பு திட்டத்தின் உத்தியோகபூர்வ தொடக்கத்தைக் குறிக்கின்றது. இக்கவர்ச்சிகரமான ஆரம்ப இரவு நிகழ்வு, இலங்கையிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வருகை தரவுள்ள புகழ்பெற்ற வர்த்தகத் தலைவர்கள், பிரபலங்கள், சமூகஊடக செல்வாக்குச் செலுத்துபவர்கள் மற்றும் முக்கிய ஆளுமைகளுடன், புகழ்பெற்ற பாலிவுட் நட்சத்திரங்களையும் உள்ளடக்கிய ஒரு பிரத்தியேகக் குழுவை ஒன்றிணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வார இறுதி நிகழ்வுகள், ஜூன் 13 சனிக்கிழமையன்று The Boulevard Brunch, The Boulevard High Tea மற்றும் The Boulevard Sundowner ஆகியவற்றை உள்ளடக்கிய கவனமாகத் திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான உயர்தர அனுபவங்களுடன் தொடரவுள்ளதுடன், ஜூன் 14 ஞாயிறன்று The Boulevard Evening நிகழ்வுடன் நிறைவடையவுள்ளது. இத்தகைய பிரத்தியேக அனுபவங்கள், பார்வையாளர்களுக்கு இத்திட்டத்தைப் பற்றிய விரிவான விபரங்களை ஆராய்வதற்கும், அதிநவீன மற்றும் ஆழமான அனுபவபூர்வமானதொரு சூழலில் Home Lands குழுவுடன் கலந்துரையாடுவதற்கும் வாய்ப்பளிக்கும். இப்பாரிய அபிவிருத்தித் திட்டத்தின் பிரமாண்டம், அந்தஸ்து மற்றும் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில், இந்த அறிமுக நிகழ்வு, வெறும் ஒரு திட்ட வெளிப்படுத்தலாக மட்டுமன்றி, இலங்கையின் இலட்சியமானதும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டதுமான ஒரு ரியல் எஸ்டேட் அபிவிருத்தித் திட்டத்திற்குப் பொருத்தமான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முதன்முறையாக, அதிஉயர் சொகுசு சர்வதேச வாழ்க்கைமுறை வர்த்தகநாமமொன்றின் ஈர்ப்பில் உருவான ஓர் உயர்தரக் கோபுர அபிவிருத்தித் திட்டம், ஆடம்பர வாழ்வியலில் ஒரு புதிய மைல்கல்லை அறிமுகப்படுத்துகின்றது. சென்ட்ரல் பார்க் பொலிவார்ட் போர்ட் சிட்டி கொழும்பு திட்டம், உலகத்தரம் வாய்ந்த வசதிகளையும், பிரீமியம் மதிப்புக்கூட்டல்களையும் கொண்டுள்ளது. சென்ட்ரல் பார்க் மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள இந்த இரட்டைக் கோபுர அபிவிருத்தியானது 37 மாடிகளைக் கொண்டு உயர்ந்து நிற்பதுடன், கொழும்பு போர்ட் சிட்டியின் மிக முதன்மையான அடையாளச் சின்னங்களில் ஒன்றாக மாறுவதற்கும் தயாராகவுள்ளது. ஏறத்தாழ 40 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட செழுமையான பசுமைப் பூங்காவையும், அழகிய நீர்வழியையும் நோக்கியவாறு, அவற்றுடன் தடையின்றி இணையும் இக்கோபுரம், இந்து சமுத்திரம் மற்றும் கண்கவர் சூரிய அஸ்தமனங்களின் தடையற்ற காட்சிகளை வழங்குகின்றது. இதன் அதிநவீனக் கட்டிடக்கலையானது சென்ட்ரல் பார்க்கின் வடிவமைக்கப்பட்ட இயற்கை எழிலோடு தடையின்றி ஒன்றிணைந்து, இந்த எதிர்கால நகரத்திற்குள் ஒரு அமைதியான சோலையை உருவாக்குகின்றது. சென்ட்ரல் பார்க் பொலிவார்ட் போர்ட் சிட்டி கொழும்பு திட்டம், பல்வேறுபட்ட நவீன வாழ்க்கைமுறைகளுக்கும் ஏற்றவாறு சிந்தனைப்பூர்வமாக வடிவமைக்கப்பட்ட 640 க்கும் மேற்பட்ட அலகுகளின் தொகுப்பை வழங்குகின்றது.
அதன் கவர்ச்சிகரமான வாழ்க்கைமுறைக்கு அப்பால், சென்ட்ரல் பார்க் பொலிவார்ட் விதிவிலக்கான முதலீட்டு சாத்தியக்கூறுகளை வழங்குகின்றது. அடையாளச் சின்னமாகக் கருதப்படும் இந்த இரட்டைக் கோபுர அபிவிருத்தித் திட்டத்தின் மொத்த மதிப்பு 300 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இது நாட்டிற்குள் பெருமளவிலான வெளிநாட்டு நாணய உள்வரவை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக Home Lands இனால் மேற்கொள்ளப்படும் 150 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு, தனி ஒரு இலங்கை அபிவிருத்தியாளரால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ரியல் எஸ்டேட் முதலீடாகப் பதிவாகியுள்ளது. இத்திட்டத்தின் மீது முதலீட்டாளர்கள் ஏற்கனவே கொண்டுள்ள வலுவான நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில், அதன் உத்தியோகபூர்வ அறிமுகத்திற்கு முன்னதாகவே வியக்கத்தக்கவாறு 50% அலகுகள் ஏற்கனவே விற்பனையாகியுள்ளன. இது சந்தையிலுள்ள பலத்த தேவையையும், இத்திட்டத்தின் ஈர்க்கக்கூடிய முதலீட்டுத் திட்டவடிவத்தையும் வெளிப்படுத்துகிறது.
பிரமாண்ட அறிமுக வார இறுதிக்கு முன்னதாக, உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் நட்சத்திரம் மஹேல ஜயவர்தனவை தனது வர்த்தகநாமத் தூதுவராக Home Lands நியமித்துள்ளது. இது நம்பிக்கை, சிறப்பு மற்றும் சர்வதேச அங்கீகாரம் ஆகியவற்றில் இருதரப்பினருக்கும் உள்ள பகிரப்பட்ட பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கின்றது.
அறிமுக வார இறுதியைத் தொடர்ந்து, Home Lands தனது சென்ட்ரல் பார்க் பொலிவார்ட் போர்ட் சிட்டி கொழும்பு விற்பனைக்கூடத்தை, 2026 ஜூன் 15 ஆம் திகதி திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளது. இவ்விற்பனைக்கூடம், இத்திட்டத்தின் தொலைநோக்குப் பார்வை, வடிவமைப்பு, முதலீட்டு சாத்தியக்கூறுகள் மற்றும் அது வழங்கவுள்ள வாழ்க்கைமுறை அம்சங்கள் குறித்த ஒரு அதிநவீன மெய்நிகர் அறிமுகத்தை பார்வையாளர்களுக்கு வழங்குவதுடன், கொழும்பு போர்ட் சிட்டியின் ஆடம்பர வாழ்வியலின் எதிர்காலத்தை அவர்கள் நேரில் அனுபவித்தறியவும் வழிவகுக்கும்.
HOME LANDS பற்றி
இலங்கையின் முதற்தர, நம்பகமான மற்றும் புத்தாக்கமிக்க வீட்டுமனை அபிவிருத்தியாளரான Home Lands, நம்பிக்கை, புத்தாக்கம் மற்றும் சிறப்பு ஆகிய அரண்களின் மீது கட்டியெழுப்பப்பட்ட தனது பாரம்பரியத்தின் மூலம் நாட்டின் ரியல் எஸ்டேட் கட்டமைப்பை வடிவமைத்து வருகின்றது. இலங்கையில் resort-style குடியிருப்பு அபிவிருத்தித் திட்டங்களின் முன்னோடியாகத் திகழும் Home Lands, தரம், வடிவமைப்பு மற்றும் வாழ்க்கைமுறை ஆகியவற்றில் புதிய மைல்கற்களை நிலைநிறுத்தி, நவீன வாழ்வியலைத் தொடர்ந்து மறுவரையறை செய்து வருகின்றது. CIDA அமைப்பிடமிருந்து மிக உயர்ந்த CS2 தரப்படுத்தலைப் பெற்றுள்ள தனது சொந்த கட்டுமானப் பிரிவான Heyraa Construction உட்பட 14 நிறுவனங்களை உள்ளடக்கிய முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு குழுமமாக, Home Lands ரியல் எஸ்டேட், கட்டுமானம், சொத்து மேலாண்மை மற்றும் வாழ்க்கைமுறை உருவாக்கம் ஆகிய துறைகளில் ஆரம்பம் முதல் இறுதி வரையிலான தீர்வுகளை வழங்கி வருவதுடன், ஒப்பற்ற தரம், புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றை உறுதிப்படுத்துகின்றது.
அவுஸ்திரேலியா, துபாய் மற்றும் லண்டன் ஆகிய பகுதிகளில் அலுவலகங்களைக் கொண்டு, சர்வதேச ரீதியில் தனது இருப்பை விரிவுபடுத்தி வரும் Home Lands, உள்நாட்டு மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றுவதுடன், நாடு முழுவதும் அடையாளச் சின்னங்களாகத் திகழக்கூடிய குடியிருப்புத் திட்டங்களை வழங்கி வருகின்றது. PropertyGuru Asia Property Awards இல் தொடர்ந்து மூன்று வருடங்களாக “இலங்கையின் சிறந்த அபிவிருத்தியாளர்” விருதை வென்றமை உட்பட பல பாராட்டுக்களையும் விருதுகளையும் Home Lands பெற்றுள்ளதுடன், 2025 ஆம் ஆண்டில் Superbrands அந்தஸ்தைப் பெற்று கௌரவிக்கப்பட்டதன் மூலம், இலங்கையிலுள்ள ஒரேயொரு ரியல் எஸ்டேட் சூப்பர்பிராண்ட் நிறுவனமாகவும் திகழ்கின்றது.
உயர்ந்த தரத் தரநிலைகளைப் பேணியபடி திட்டங்களை குறித்த காலத்திற்குள் நிறைவேற்றி வழங்குவதில் புகழ்பெற்ற, இலங்கையின் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த முன்னணி சொத்து அபிவிருத்தி நிறுவனமாக Home Lands திகழ்கிறது. கருப்பொருள் அடிப்படையிலான மாபெரும் குடியிருப்பு அபிவிருத்தித் திட்டங்களின் மூலம், 3,750 ரிசோர்ட் பாணி அடுக்குமாடி வீடுகள் மற்றும் வில்லாக்களை வெற்றிகரமாக வழங்கியுள்ள Home Lands, மேலும் 500 வீட்டு அலகுகளை அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஒப்படைக்கத் தயாராக வைத்துள்ளது. அதேவேளை, எதிர்கால வாழ்க்கை முறையை மையமாகக் கொண்ட 10 மாபெரும் நவீன குடியிருப்பு அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் 2,200-க்கும் அதிகமான வீட்டு அலகுகள் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
இந்த சாதனைகள், Home Landsன் அபார அளவிலான செயற்பாட்டு வலிமை, தொடர்ச்சியான வளர்ச்சி வேகம் மற்றும் இலங்கை ரியல் எஸ்டேட் துறையில் அதன் முன்னணி சந்தைநிலையை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

