Header Logo
Mogo Academy

வணிகம்
இலங்கையில் முச்சக்கர வண்டி சாரதிகள் மத்தியில் வீதிப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அலியான்ஸ் லங்கா ஊக்குவிக்கின்றது

Jun 10, 2026 - 11:40 AM -

0

இலங்கையில் முச்சக்கர வண்டி சாரதிகள் மத்தியில் வீதிப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அலியான்ஸ் லங்கா ஊக்குவிக்கின்றது
Mobitel inner

இலங்கையில் வீதிப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக அலியான்ஸ் லங்கா நிறுவனம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற முயற்சிகளின் கீழ் நாடளவில் பாரியளவிலான ஸ்டிக்கர் ஊக்குவிப்புப் பிரச்சாரமொன்றை அண்மையில் முன்னெடுத்துள்ளது. சுமார் 60 இடங்களில் முன்னெடுக்கப்பட்ட இப்பிரச்சாரத்தில் 7,000 க்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிச் சாரதிகள் உள்வாங்கப்பட்டுள்ளனர். 

இலங்கையில் அன்றாடப் போக்குவரத்து வலையமைப்பில் முச்சக்கர வண்டிச் சாரதிகள் மிகவும் அத்தியாவசியமான பங்காற்றி வருவதுடன், சமூகங்களுக்கும் மற்றும் வாழ்வாதாரங்களுக்கும் உதவி வருகின்றனர். இதனை அங்கீகரிக்கும் வகையில், விழிப்புணர்வு என்பதற்கும் அப்பால் பொறுப்புள்ள விதத்தில் வாகனத்தை ஓட்டுதல் மற்றும் விபத்தைத் தடுத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அர்த்தமுள்ள வகையில் நினைவுபடுத்தும் விதத்தில் இம்முயற்சியை அலியான்ஸ் லங்கா திட்டமிட்டு ஏற்பாடு செய்துள்ளது. 

உயிர்களுக்கு முன்னுரிமையளித்து, விபத்துக்களைத் தவிர்ப்பதில் தீவிரமான பங்களிப்பை வழங்குவதற்கு சாரதிகளை ஊக்குவித்து அழைப்பு விடும் வகையில், “ජීවීතයට 1, අනතුරට තිත!/ வாழ்க்கைக்கு 1” என்ற தொனிப்பொருள் கொண்ட சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் இடம்பெறும் வலுவான செய்தியே இப்பிரச்சாரத்தின் மையமாகவுள்ளது. 

இலங்கையில் சாரதிகள் சமூகங்களுக்கு உதவுவதில் தனது அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, வீதிகளில் நீண்ட நேரத்தைச் செலவிடுகின்ற அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பையும், காப்பீட்டையும் வழங்குவதற்காக இதில் பங்கேற்கின்ற சாரதிகளுக்கு ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் விபத்து மரணக் காப்பீட்டையும் அலியான்ஸ் லங்கா அவர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. 

பல்வேறு பிராந்தியங்களிலும் சாரதிகளுடன் நேரடியாக ஈடுபாடுகளைப் பேணி, இலங்கையில் வீதிப் பாதுகாப்பு, விபத்துக்களைத் தடுத்தல், மற்றும் பொறுப்புமிக்க வழியில் வாகனம் ஓட்டுதல் தொடர்பான உரையாடல்களை இப்பிரச்சாரம் வெற்றிகரமாக ஈடுபடுத்தியுள்ளது. ஒட்டப்பட்ட ஒவ்வொரு ஸ்டிக்கரும் உயிரின் மதிப்பை காட்சிரீதியாக நினைவுபடுத்துவதுடன், வீதியில் பாதுகாப்பான தெரிவுகளை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளது. 

இத்தகைய முயற்சிகள் ஊடாக காப்புறுதி என்பதற்கும் அப்பால், தினசரி வீதிகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு உதவி, அனைவருக்கும் பாதுகாப்பான வீதிப் போக்குவரத்திற்குப் பங்களிப்பதற்காக இலங்கையில் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை தீவிரமாக ஊக்குவிப்பதில் தனது வகிபாகத்தை அலியான்ஸ் லங்கா தொடர்ந்தும் வலுப்படுத்தி வருகின்றது. எம்மைப் பொறுத்தவரையில் உங்களுக்கே எப்போதும் முதலிடம் (To Us, You are Always #1). 

அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் ஆனது ஜேர்மனியின் மியூனிக் மாநகரத்தைத் தலைமையகமாகக் கொண்டு, பிரதானமாக காப்புறுதி மற்றும் சொத்து முகாமைத்துவ வணிக சேவைகளை வழங்கி வருகின்ற உலகளாவிய முன்னணி நிதியியல் சேவைகள் வழங்குனரான Allianz SE இன் முழுமையான உரிமையாண்மையின் கீழான துணை நிறுவனமாகும். Interbrand ன் மிகச் சிறந்த சர்வதேச வர்த்தகநாமங்கள் தரப்படுத்தலில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாகவும் உலகின் நம்பர் 01 காப்புறுதி நாமமாக Allianz SE அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது.


MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara