Jun 10, 2026 - 12:54 PM -
0
Fems இனால் ஆதரவளிக்கப்படும் H.E.R மையம், நாடு முழுவதிலும் மாதவிடாய் சுகாதாரத்தை முன்னேற்றும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றுமொரு படிமுறையை அண்மையில் மேற்கொண்டிருந்தது.டயலொக் பிஸ்னஸ் சேர்விசஸ் உடன் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையினூடாக, நாடு முழுவதிலும் காணப்படும் டயலொக் பிஸ்னஸ் சேர்விசஸ் அலுவலக வளாகங்களில் மாதவிடாய் தூய்மை அணையாடைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய டிஸ்பென்சர் அலகுகள் மற்றும் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளது. இதனூடாக ஆயிரக் கணக்கான பெண் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பங்காண்மை, இரண்டு முக்கிய பிரிவுகளின் ஊடாக வடிவம் பெற்றது. அதன் முதலாவது பிரிவாக, டயலொக் பிஸ்னஸ் சேர்விசஸ் நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்காக நடத்தப்பட்ட மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த தொடர் விழிப்புணர்வு அமர்வுகள் அமைந்திருந்தன. மாதவிடாய் தொடர்பான சமூகக் கட்டுக்கதைகளைத் தகர்க்கவும், தவறான புரிதல்களைக் களையவும், பெண் ஊழியர்களுக்கு அவர்களின் மாதவிடாய் ஆரோக்கியம் குறித்த துல்லியமான, நடைமுறைச் சாத்தியமான அறிவை வழங்கி அவர்களை ஆளுமைப்படுத்துவதற்கும் இந்த அமர்வுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இந்த விழிப்புணர்வு அமர்வுகள், ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டிருந்த ஒரு திட்டத்தின் தொடர்ச்சியாகவும் அதன் பலத்தை அதிகரிப்பதாகவும் அமைந்திருந்தன.
இத்திட்டத்தின் இரண்டாவது பிரிவை நடைமுறைப்படுத்தும் முகமாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதைத் தொடர்ந்து, பல கிளை அலுவலகங்களைக் கொண்ட டயலொக் பிஸ்னஸ் சேர்விசஸ் அலுவலகங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் எங்கும் மொத்தம் 29 சுகாதாரப் பாதுகாப்பு அணையாடைகள் வழங்கும் டிஸ்பென்சர் அலகுகள் நிறுவப்பட்டன. இந்த நிறுவல்கள் கொழும்பிலுள்ள முக்கிய கூட்டாண்மை அலுவலக அமைவிடங்களையும், அத்துடன் அம்பாறை, அனுராதபுரம், பதுளை, மட்டக்களப்பு, காலி, யாழ்ப்பாணம், கண்டி, கிளிநொச்சி, குருநாகல், நீர்கொழும்பு, நுகேகொட, இரத்தினபுரி, திருகோணமலை, வவுனியா, வென்னப்புவ மற்றும் பல பகுதிகள் உள்ளடங்கலாக 23 டயலொக் சில்லறை விற்பனை நிலையங்களையும் உள்ளடக்கியிருந்தன. நாடளாவிய ரீதியிலான இந்த பரவலாக்கம், டயலொக் ஊழியர்களான பெண்கள் மட்டுமன்றி, இந்த இடங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களும் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய மாதவிடாய் தயாரிப்புகளை எவ்வித சிரமமுமின்றி கண்ணியமான முறையில் பெற்றுக்கொள்வதை உறுதி செய்கிறது.
இலங்கையின் தற்போதைய சூழலில் இத்தகைய முன்முயற்சிகளுக்கான தேவை மிகவும் இன்றியமையாததாகக் காணப்படுகிறது. ஏனெனில், மாதவிடாய் வயதெல்லையிலுள்ள பெண்களில் 30 சதவீதமானோர் மாத்திரமே சுகாதாரப் பாதுகாப்பு அணையாடைகளை வழக்கமாகப் பயன்படுத்துகின்றனர். கணிசமான எண்ணிக்கையிலான பெண்களுக்கு மாதவிடாய் தயாரிப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளும், துல்லியமான ஆரோக்கிய அறிவும் இன்னும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ளன. மாதவிடாய் தொடர்பான சமூகக் கட்டுக்கதைகளும் ஒரு பெரும் தடையாகத் தொடர்ந்து நீடிப்பதுடன், அதன் விளைவுகள் பணியிடங்களிலும் சமூகங்களிலும் பிரதிபலிக்கின்றன. இது பெரும்பாலும் தேவையற்ற அசௌகரியங்கள், உற்பத்தித்திறன் குறைவு மற்றும் பல சந்தர்ப்பங்களில் பணிக்கு சமூகமளிக்காமை போன்ற விளைவுகளுக்கு வழிவகுக்கிறது.
உதவுதல், வலுவூட்டல் மற்றும் உயர்வடைதல் ஆகிய அதன் மூன்று ஸ்தாபகக் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட H.E.R மையம், தனது சமூகப் பொறுப்புணர்வு முயற்சிகளை அர்த்தமுள்ள மற்றும் அளவிடக்கூடிய திட்டங்களாக மாற்றுவதற்காக Fems நிறுவனத்தால் நிறுவப்பட்டது. டயலொக் பிஸ்னஸ் சேர்விசஸ் நிறுவனத்துடனான இந்த பங்காண்மை, இத்தகைய நற்பணிகளைப் கூட்டாண்மைத் துறைக்கும் விரிவுபடுத்துவதற்கான மையத்தின் தொடர்ச்சியான முயற்சியைப் பிரதிபலிக்கிறது. ஏனெனில், நிலையான நடத்தை மற்றும் கலாசார மாற்றங்களை உருவாக்குவதில் பணியிடங்கள் மிகவும் சக்திவாய்ந்த தளங்களாக விளங்குகின்றன என்பதை இந்நிறுவனம் ஆழமாக உணர்ந்துள்ளது.
ஹேமாஸ் கொன்சியுமர் பிரான்ட்ஸ் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் சச்சினி கமகே இந்த நிகழ்வில் உரையாற்றுகையில், “எந்தப் பெண்ணும் தமது வீட்டில், தனது சமூகத்தில் அல்லது பணியிடத்தில் இருந்தாலும், எவ்வித ஆதரவும் இன்றித் தனது மாதவிடாய் ஆரோக்கியத்தை எதிர்கொள்ள நேரிடக் கூடாது என்பதில் H.E.R மையத்தைச் சேர்ந்த நாம் எப்போதும் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம். டயலொக் பிஸ்னஸ் சேர்விசஸ் நிறுவனத்துடனான இந்த பங்காண்மை, நிறுவனங்கள் ஒரு பொதுவான நோக்கத்திற்காக ஒன்றிணையும் போது எவ்வாறான சாத்தியங்கள் உருவாகும் என்பதற்கான ஒரு சிறந்த பிரதிபலிப்பாகும். விழிப்புணர்வு மற்றும் அதற்கான தேவைகளை அணுகுவதற்கான வாய்ப்பு ஆகிய இரண்டையும் ஒன்றிணைப்பதன் மூலம், நாங்கள் வெறும் சுகாதாரத் தேவையை மட்டும் பூர்த்தி செய்யவில்லை; மாறாக, தொழில்முறைச் சூழல்களில் மாதவிடாய் எவ்வாறு புரிந்து கொள்ளப்படுகிறது மற்றும் பேசப்படுகிறது என்பதில் ஒரு சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் பங்களிக்கிறோம். டயலொக் பிஸ்னஸ் சேர்விசஸ் போன்ற அர்ப்பணிப்புமிக்க மற்றும் மதிப்புமிக்கதொரு பங்காளியுடன் இணைந்து இப்பணியை முன்னெடுப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.” என்றார்.
டயலொக் பிஸ்னஸ் சேர்விசஸ் பிரதம அதிகாரி ஹேமக பாலசூரிய கருத்துத் தெரிவிக்கையில், “எமது டயலொக் பிஸ்னஸ் சேர்விசஸ் குடும்பத்தின் பெண்களின் நலன் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் நேரடியாக தொடர்புடைய திட்டமொன்றுக்காக H.E.R மையத்துடன் கைகோர்த்துள்ளதையிட்டு நாம் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். பெண்கள் தமக்கு ஆதரவளிக்கப்படுவதாக, வலுவூட்டப்படுவதாக, மதிப்பளிக்கப்படுவதாக உணரும் சூழலை உருவாக்குவதாக இது அமைந்துள்ளது. அணையாடைகள் விநியோகிக்கும் அலகுகளை நிறுவுவது மற்றும் எமது சமூகத்தில் பொதுவாக பேசப்படாத, மாதவிடாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பது போன்றன, நடைமுறைச்சாத்தியமான படிமுறைகளாக இருப்பதுடன், அவற்றினூடாக வழங்கப்படும் தகவல்கள் மிகவும் பெறுமதி வாய்ந்தவையாகும். இந்த நடவடிக்கையை மேற்கொள்வதனூடாக, பெண்கள் மாதவிடாய் சுகாதாரம் என்பது பணியிட பொறுப்பு மற்றும் அதற்கேற்ற வகையில் செயற்படுவது என்பதற்காக, இலங்கை முழுவதிலுமுள்ள பல நிறுவனங்களுக்கு எம்மால் முன்மாதிரியாக திகழ முடியும்.” என்றார்.
இந்தத் திட்டத்தை நாடளாவிய ரீதியில் பல இடங்களில் செயல்படுத்துவதன் மூலம், மாதவிடாய் ஆரோக்கியம், பாலின சமத்துவம் மற்றும் பணியிட உள்ளடக்கல் போன்ற முக்கிய விவகாரங்களில் வணிக நிறுவனங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதற்கான ஒரு சிறந்த முன்மாதிரியை இவ்விரு நிறுவனங்களும் அமைத்துள்ளன.
Fems பற்றி:
பெண்கள் மாதவிடாய் சுகாதார அணையாடை வர்த்தக நாமமாக 2004 ஆம் ஆண்டில் Fems ஆரம்பிக்கப்பட்டது. பெண்களுக்கு சுதந்திரமாகவும், சமூகமட்டத்தில் காணப்படும் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு வெளியில் வருவதற்கும் கைகொடுப்பதை இலக்காகக் கொண்டு செயலாற்றுகின்றது.
சிக்கனமான, உயர் தரம் வாய்ந்த சுகாதார அணையாடைகளை சகல நிலைகளையும் சேர்ந்த பெண்களுக்கு இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய வசதியை வழங்குவதற்கு Fems தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது தயாரிப்பு தெரிவுகளில் Aya தயாரிப்புகளையும் உள்ளடக்கியுள்ளது. தரத்தில் கவனம் செலுத்துவதுடன், சிக்கனமான தயாரிப்புகளை நாடும் நுகர்வோருக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆழமான புரிந்துணர்வு மற்றும் கரிசனையுடன், அதிகரித்துச் செல்லும் பெண்களுக்கான மாதவிடாய் தூய்மை தேவைகளை நிவர்த்தி செய்வதில் Fems கவனம் செலுத்தி, அவர்களுக்கு சௌகரியமாகவும், நம்பிக்கையுடனும், ஆதரவுடனும் திகழ்வதை உறுதி செய்ய பங்களிப்பு வழங்குகின்றது. பெண்கள் மாதவிடாய் கால பராமரிப்பு தயாரிப்புகளை வழங்குவதில் Fems தன்னை உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது.
மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்து இல்லங்கள் தோறும் விழிப்புணர்வூட்டுவதும், மாதவிடாய் தொடர்பாகச் சமூகத்தில் நிலவும் தவறான கருத்துக்களை அகற்றுவதற்காகப் பணியாற்றுவதும் இந்த வர்த்தக நாமத்தின் நோக்கத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது. பெண்களின் ஆற்றல் மீது நம்பிக்கை கொண்டு, அவர்களின் வாழ்வியல் பயணத்திற்குத் துணை நின்று, அவர்களின் மனவலிமையைக் கொண்டாடும் ஒரு நம்பகமான தோழனாகவும், பெண்கள் வலுவூட்டலின் கலங்கரை விளக்கமாகவும் Fems திகழ்கிறது.
மேலதிக தகவல்களுக்கு பார்வையிடுங்கள், visit https://hemas.com/brands/fems.html.

