Header Logo
Mogo Academy

கிழக்கு
உயிர்த்த ஞாயிறு விசாரணைகளை எதிர்க்கட்சியினர் குழப்பப் பார்க்கின்றனர்!

Jun 10, 2026 - 04:34 PM -

0

உயிர்த்த ஞாயிறு விசாரணைகளை எதிர்க்கட்சியினர் குழப்பப் பார்க்கின்றனர்!
Mobitel inner

உயிர்த்த ஞாயிறு விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டுகின்ற நேரத்திலே அதனை குழப்புகின்ற ஏற்பாடுகளை இப்போது எதிர்க்கட்சி சார்ந்த அரசியல்வாதிகள், ராஜபக்சக்கள், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் இன்று  அதனை ஒடுக்குவதற்காகவும் அந்த விசாரணைகளை குழப்பும் விதமான செயல்பாடுகளை இப்போது அவர்கள் முன்னெடுத்துக் கொண்டு வருகின்றார்கள் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். 

சிறைச்சாலைகளிலே இவர்கள் குறிப்பிடும் விதமான எந்த ஒரு நடவடிக்கையும் அங்கே இல்லை. சரியான முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. 

அரசியல்வாதிகள் மாத்திரம் சில வரப்பிரசாதங்களைக் கேட்டு அங்கே உண்ணாவிரதம் இருப்பதும், தங்களுக்கு வசதிகள் ஏற்படுத்தித் தருமாறும் கோரிக்கை வைக்கின்றார்கள். ஆனால் இங்கே யாருக்கும் விசேடமான எந்த ஒரு வசதியும் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்தார். 

டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடுகளும் புனரமைப்பதற்கான நிதி உதவிகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன. 

புத்தசாசனம், மதம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடாக இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இந்து மத வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்வதற்கான, புனரமைப்பதற்கான நிதியுவிகள் வழங்கும் நிகழ்வு இன்று (10) பிற்பகல் நடைபெற்றன. 

முட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.ஜே. தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்துகொண்டார். 

புத்தசாசனம், மதம் மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சரின் இந்து சமய விவகாரங்களுக்கான இணைப்பாளர் பீதாம்பரம் வாலசஸ்ரீதரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர். 

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 ஆலயங்களை சுத்தம் செய்வதற்காக 25,000 ரூபா வீதம் வழங்கப்பட்டதுடன் புனரமைப்பு செய்வதற்காக இரண்டரை இலட்சம் ரூபா 13 ஆலயங்களுக்கும் ஒரு ஆலயத்திற்கு மூன்றரை இலட்சம் ரூபாவும் நிதியுதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. 

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்துக்கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பி;னர், 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிலே அன்று பாதிக்கப்பட்ட தரப்பினருடன் அந்தத் தாக்குதலிலே சம்பந்தப்பட்ட தரப்பினர்களை இனங்காண்பதற்காக விசாரணைகள் முன்னெடுத்துக் கொண்டு வருகின்ற இந்த வேளையிலே, அந்த விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டுகின்ற இந்த நேரத்திலே அதனை குழப்புகின்ற ஏற்பாடுகளை இப்போது எதிர்க்கட்சி சார்ந்த அரசியல்வாதிகள், விசேடமாக ராஜபக்சக்கள், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் இன்று அதனை ஒடுக்குவதற்காகவும் அந்த விசாரணைகளை குழப்பும் விதமான செயல்பாடுகளை இப்போது அவர்கள் முன்னெடுத்துக் கொண்டு வருகின்றார்கள். 

கடந்த காலங்களிலே உங்களுக்குத் தெரிந்திருக்கும் இந்த விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என பலவிதமாக கோரிக்கை முன்வைத்தவர்கள், இந்த ஆட்சியாளர்கள் விசாரணைகளை முன்வைக்க மாட்டார்கள், விசாரணை செய்ய மாட்டார்கள் என்று குறிப்பிட்டவர்கள், இன்று அந்த விசாரணையை குழப்புகின்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். 

அவர்கள் இப்போது குறிப்பிடுகின்றார்கள், நாங்கள் இந்த விசாரணையை முன்னெடுத்திருப்போம், எங்களுக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்கின்ற இந்த வேளையிலே இந்த விடயங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்குமாக இருந்தால் நாங்கள் சரியாக விசாரணை செய்து உரியவர்களுக்கு எதிராக தண்டனைகளை வழங்கியிருப்போம் என்று கூறிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்களோடு சம்பந்தப்பட்ட விடயமாக இருப்பதால் இன்று அதை குழப்புகின்ற ஒரு செயல்பாடுகளையே அவர்கள் முன்னெடுத்துக் கொண்டு வருகின்றார்கள். 

எதுவாக இருந்தாலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயமாக இந்த உயிர் நீத்தவர்களுக்கு நீதியினைப் பெற்றுக் கொடுப்பதற்கும், தாங்கள் எதற்காக உயிர் நீத்தோம், ஏன் எங்களுக்கு எதிராக இந்தத் தாக்குதல் நடவடிக்கை ஈடுபட்டது, இடம்பெற்றது என்பது கூட அறியாமல் ஒரு நிலைமை இன்று இருக்கின்றது. 

அந்த நீதிக்காக எப்போதும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒன்றிணைந்து நிற்கும் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். ஆகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எப்பொழுதுமே நீதிக்கும் நேர்மைக்காகவும் மக்கள் நேயத்திற்காகவும் செயல்படுகின்ற ஒரு அரசாங்கமாக தொடர்ச்சியாக இருக்கும் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். 

இந்த விசாரணையின் போது பலவிதமான தரப்பினருக்கு நாங்கள் விசாரணையை முன்னெடுத்துக் கொண்டு வருகின்றோம். சிலபேர் அரசுச் சாட்சியாக மாறியிருக்கின்றார்கள். ஒரு சிலர் இன்னும் தொடர்ந்து விசாரணைக்காக முன்னெடுத்துக் கொண்டு வருகின்றார்கள். அவர்களைத் தொடர்ச்சியாக விசாரணை செய்யும்போது நான் நினைக்கின்றேன் அந்த விசாரணை மிகவும் துரிதமாக இடம்பெற்றுக் கொண்டு வருகின்றது. மிக நீண்ட காலமாக இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தது. இருந்தாலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நாட்டைப் பொறுப்பேற்றதன் பின்னர் இந்த விசாரணை நேர்மையாகவும் நீதியாகவும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. 

கடந்த காலங்களில் குறிப்பிட்டிருந்தார்கள் நாங்கள் இதிலே எந்த ஒரு சம்பந்தமும் இல்லை, நாங்கள் உண்மையான நீதியானவர்களைத் தேடுவோம் என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் இன்று அவர்களே அதற்கு எதிராக விசாரணையை குழப்பும் விதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 

சிறைச்சாலைகளைப் பொறுத்தவரைக்கும் சிறைச்சாலைகளிலே சகலவிதமான வசதிகள், அடிப்படை வசதிகள் அந்த கைதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. சிறைச்சாலைகளிலே தேவையான அடிப்படை வசதிகள் உட்பட ஏனைய வசதிகள், சுகாதார வசதிகள் உட்பட அவர்களுக்கான வைத்திய வசதிகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. உங்களுக்குத் தெரியும் ஒரு கைதி அவர் சுகயீனமுற்றிருந்தால் நேரடியாக உள்ளே இருக்கின்ற வைத்தியசாலையைப் பயன்படுத்தி அவர்களுக்கான சிகிச்சை வழங்கப்படுகின்ற அதே நேரம், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக அரசு வைத்தியசாலைகளுக்குச் சென்று அவர்களை சிகிச்சை வழங்குகின்ற ஒரு செயல்பாடுகளையும் அரசாங்கம் முன்னெடுத்துக் கொண்டு வருகின்றது. சிறைச்சாலைகளிலே இவர்கள் குறிப்பிடும் விதமான எந்த ஒரு நடவடிக்கையும் அங்கே இல்லை. சரியான முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. உங்களுக்குத் தெரியும் பல போதை குற்றச்சாட்டுகளோடு சம்பந்தப்பட்டவர்களும் கூட இன்று சிறைச்சாலைகளிலே தான் இருக்கின்றார்கள். 

அரசியல்வாதிகள் மாத்திரம் சில வரப்பிரசாதங்களைக் கேட்டு அங்கே உண்ணாவிரதம் இருப்பதும், தங்களுக்கு வசதிகள் ஏற்படுத்தித் தருமாறும் கோரிக்கை வைக்கின்றார்கள். ஆனால் இங்கே யாருக்கும் விசேடமான எந்த ஒரு வசதியும் வழங்கப்பட மாட்டாது. அனைவருக்கும் வழங்கப்படுகின்ற அதே வசதிகள் தான் அவர்களுக்கும் வழங்கப்படும். 

ஆகவே அவர்கள் எதிர்பார்க்கின்ற அந்த கடந்த கால வசதிகளை, கடந்த கால அரசாங்கம் கொடுத்த வசதிகளை இந்த அரசாங்கத்தில் அவர்கள் எதிர்பார்க்க முடியாது என்பதை அவர்களுக்குக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். சிறைச்சாலைகள் சரியான முறையில் அந்த சிறைச்சாலை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

சுரேஷ் சலே சம்பந்தமான விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது. அவர் அந்த சிறைக்கூடத்திற்குள்ளே இருந்து உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கின்றார். இப்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துகொண்டிருக்கின்றார். சிங்கள மக்களோ ஏனைய மக்களோ யாராக இருந்தாலும் இந்த உயிர்த்த ஞாயிறுகான நீதியினைத் தான் அவர்கள் வலியுறுத்தி இருக்கின்றார்கள்.இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு வாக்களிக்கும் போது அவர்கள் பிரதானமாகக் கேட்டுக் கொண்ட விடயம், இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளை வெளிக்கொண்டு வாருங்கள் என்பது தான். என்ற கருத்தியலுக்குத் தான் அவர்கள் வாக்களித்திருந்தார்கள். அது இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சரியான முறையில் விசாரணைகளை முன்னெடுத்துக் கொண்டு வருகின்றது. 

அனைத்து இன மக்களும், அனைத்து மதத்தினர்களும் இந்தத் தாக்குதல் தொடர்பான உண்மைச் சம்பவத்தை வெளிக்கொணர்வதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கான இறுதிக்கட்டம், இறுதி வேலை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. உண்மையான சூத்திரதாரி வெளியில் வந்து விடுவார் என்ற பயத்திலே தான் இன்றைக்குத் தாங்களும் இதில் சூத்திரதாரிகளாக மாட்டிக்கொள்ளப் போகின்றோமோ என்ற அச்சத்திலே தான் இன்று அவர்கள் பழிவாங்குவதாகவும் அரசியல் பழிவாங்கல் என்று கூறிக்கொண்டு தப்பிக்க முற்படுகின்றார்களே தவிர, இன்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தாலும் உண்மை என்றும் தோற்காது. அந்த உண்மையின் வெளிச்சம் வெளிக்கொணரப்படும் என்று கூறிக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

--


MOST READ

காணொளி
152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

Mobitel Upahara