Header Logo
Mogo Academy

சினிமா
அறிவிப்பை தள்ளிப்போட்ட லாரன்ஸ்!

Jun 10, 2026 - 05:29 PM -

0

அறிவிப்பை தள்ளிப்போட்ட லாரன்ஸ்!
Mobitel inner

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக தகவல் பரவி வந்தது. இதனை தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்ற செய்தி பரவி வருகிறது. 

இதுகுறித்து விளக்கம் கேட்டு பலரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் தெரிவிக்கலாமே என்று கேட்டுள்ளனர். இப்படி ஒரு தகவல் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், இது பற்றிய ஒரு விளக்கத்தை தெரிவிக்க விரும்புகிறேன். என் படப்பிடிப்பு முடிந்தவுடன் என் தாயாரின் ஆசீர்வாதத்துடன் என் வாழ்க்கை தொடர்பான ஒரு முக்கியமான முடிவை நாளை (11) காலை 9.30 மணிக்கு அறிவிக்க உள்ளதாக ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார். 

இந்த நிலையில், இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவையொட்டி நாளை அறிவிக்க இருந்த முக்கிய முடிவை ஒரு நாளைக்கு தள்ளிவைப்பதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

அனைவருக்கும் வணக்கம், 

நாளை (11) காலை 9:30 மணிக்கு எனது வாழ்க்கை குறித்த ஒரு முக்கிய முடிவை அறிவிப்பதாக நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன். 

தற்போது பாரதிராஜா சார் அவர்களின் மறைவால் திரையுலகமே துயரத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த இழப்பு, குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்றதொரு தனிப்பட்ட துயரமாக எனக்குத் தோன்றுகிறது. பாரதிராஜா சார் மீதும், சினிமாத்துறைக்கு அவர் ஆற்றியுள்ள மகத்தான பங்களிப்பின் மீதும் கொண்டுள்ள மரியாதையின் காரணமாக, எனது அறிவிப்பை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளேன். 

நாளைக்குப் பதிலாக, 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு அந்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.


MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara