Jun 10, 2026 - 06:00 PM -
0
இலங்கையின் முன்னணி மலர் மற்றும் அன்பளிப்பு வர்த்தக நாமமான Lassana.com, தனது புதிய மலர் விற்பனை நிலையத்தை அண்மையில் Cinnamon Grand கொழும்பில் அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது. இந்த நகர்வானது கொழும்பின் விருந்தோம்பல் மற்றும் வாழ்க்கை முறைத் துறையில் வர்த்தக நாமத்தின் இருப்பை வலுப்படுத்துவதுடன், வாடிக்கையாளர்களுக்கு உயர்தர மலர் அன்பளிப்புகள் மற்றும் மலர் சார்ந்த திருமண அனுபவங்களை வசதியாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறது.
கொமர்ஷல் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சனத் மனதுங்க பிரதம விருந்தினராகவும், Lassana.com வர்த்தக நாமத் தூதுவரும், முன்னாள் இலங்கையின் உலக அழகியுமான அனுதி குணசேகர கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டு இந்தப் புதிய விற்பனை நிலையத்தை வைபவ ரீதியாகத் திறந்து வைத்தனர். Lassana நிறுவனக் குழுமத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி லசந்த மாலவிகே, மலர் பிரிவின் தலைவர் Piet De Jong , Cinnamon Grand கொழும்பின் பொது முகாமையாளர் நஸூமி அஷார், Lassana Flora Weddings இன் ஆடம்பர திருமணங்களின் முகாமையாளர் யூசுப் சிராஜுதீன் ஆகியோருடன் பெருமளவிலான விருந்தினர்களும் நலன்விரும்பிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
புதிய Lassana.com விற்பனை நிலையமானது, கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மலர்கள், மலர் அலங்காரங்கள் மற்றும் அன்பளிப்புத் தீர்வுகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், ஹோட்டல் விருந்தினர்கள், நிறுவன வாடிக்கையாளர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு நகரத்தின் மையப்பகுதியில் உயர்தர மலர் அன்பளிப்புகளை வசதியாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறது. கொழும்பின் மிகச் சிறந்த விருந்தோம்பல் இடங்களுள் ஒன்றான இந்த ஹோட்டலின் வரவேற்பறையில் அமைந்துள்ள புதிய மலர் விற்பனை நிலையமானது, நேர்த்தி, வசதி மற்றும் Lassana.com வர்த்தக நாமத்துடன் வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையான தரம் ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது. இந்த விற்பனைய நிலையமானது நிறுவனத்தின் மலர் கலைத்திறன் மற்றும் திருமண நிகழ்வு நிபுணத்துவத்தை வெளிப்படுத்தும் ஓர் இடமாகவும் செயல்படும்.
இந்த விரிவாக்கம் குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட நிறுவனத் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி லசந்த மாலவிகே, "இலங்கையின் மிகப் பரந்த மலர் மற்றும் அன்பளிப்புச் சூழலமைப்பை உருவாக்கும் Lassana.com இன் பயணத்தில், எமது Cinnamon Grand விற்பனை நிலையத்தின் அமைவானது ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இந்தக் கூட்டாண்மையானது, தடையற்ற மற்றும் மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதற்காக நாட்டின் முன்னணி மலர் வர்த்தக நாமத்தையும் இலங்கையின் மிகவும் மதிக்கப்படும் விருந்தோம்பல் வர்த்தக நாமங்களில் ஒன்றையும் ஒன்றிணைக்கிறது. நேரடியாக வரும் வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றுவதற்கு அப்பால், இந்த விற்பனை நிலையமானது பல வழிகளிலான அன்பளிப்பு மையமாகவும் செயல்படுகிறது. வாடிக்கையாளர்கள் Lassana.com ஊடாக மேற்கொள்ளும் கொள்வனவுகளை Cinnamon Grand இல் வசதியாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறது. இந்த விற்பனை நிலையத்தின் மலர் சேகரிப்புகளுடன், Cinnamon Grand இன் புகழ்பெற்ற இனிப்பு வகைகளும் (confectionery), மின்சார வாகனங்கள் ஊடாக கொழும்பு 1 முதல் 4 வரையான பகுதிகளில் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. உயர்தர மலர்கள், சிறந்த இனிப்பு வகைகள், வசதி மற்றும் நிலைபெறுதன்மை ஆகியவற்றை ஒன்றிணைப்பதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் வாழ்க்கையின் சிறந்த தருணங்களைக் கொண்டாடுவதை நாங்கள் முன்பை விட எளிதாக்குகிறோம்" என்று தெரிவித்தார்.
அன்பளிப்பு வழங்குவது குறித்த தனது கருத்துகளை வெளியிட்ட Lassana.com வர்த்தக நாமத் தூதுவர் அனுதி குணசேகர, “மலர்கள் அவற்றின் அழகு அல்லது நறுமணத்திற்காக மட்டும் போற்றப்பட வேண்டியவை அல்ல என்று நான் நம்புகிறேன். அவை நமக்கொரு பாடத்தையும் கற்றுக்கொடுக்கின்றன. மலர்கள் பூக்கின்றன, வாடுகின்றன, மீண்டும் பூக்கின்றன. மகிழ்ச்சியும் கிட்டத்தட்ட அப்படித்தான். அது சிறிது காலம் நம்மை விட்டு விலகியிருந்தாலும், மீண்டும் திரும்பும் இயல்புடையது. மலர்கள் நமக்கு அதனை நினைவூட்டுகின்றன என்று நான் நினைக்கிறேன்” என்றார்.
Cinnamon Grand கொழும்பின் பொது முகாமையாளர் நஸூமி அஷார் கருத்துத் தெரிவிக்கையில், " Cinnamon Grand கொழும்பில், எங்கள் விருந்தினர்களுக்கு நாங்கள் வழங்கும் அனுபவங்களை மேம்படுத்துவதற்கான வழிகளை நாங்கள் தொடர்ந்து தேடி வருகிறோம். Lassana.com உடனான எமது கூட்டாண்மையானது, சிறந்த சேவை, ஆக்கத்திறன் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றில் அர்ப்பணிப்பைப் பகிர்ந்துகொள்ளும் இரண்டு நம்பகமான இலங்கை வர்த்தக நாமங்களை ஒன்றிணைக்கிறது. இந்த விற்பனை நிலையத்தின் இணைப்பானது எங்கள் விருந்தினர்களுக்கு வசதியைச் சேர்ப்பது மட்டுமன்றி, Cinnamon Grand கொழும்புக்கு உரித்தான வாழ்க்கை முறை மற்றும் கொண்டாட்ட அனுபவங்களையும் வளப்படுத்துகிறது. Lassana.com ஐ எமது ஹோட்டலுக்கு வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைவதுடன், எங்கள் விருந்தினர்களுக்கு பல மறக்க முடியாத தருணங்களை உருவாக்கும் வெற்றிகரமான கூட்டாண்மையை எதிர்பார்க்கிறோம்" என்றார்.
Lassana.com தனது சில்லறை வர்த்தகத் தொடர்பாடல் மையங்களின் வலையமைப்பை எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்துவதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் அன்பளிப்புத் தீர்வுகளை மேம்படுத்தவும், புதிய மூலோபாய விருந்தோம்பல் கூட்டாண்மைகளை மேலும் விரிவுபடுத்தவும், அத்துடன் ஆக்கபூர்வமான மலர் மற்றும் அன்பளிப்புச் சேகரிப்புகளின் அறிமுகத்துடன் தொடர்ந்து புதுமைகளை புகுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

