Header Logo
Mogo Academy

வணிகம்
வர்த்தகங்கள் மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு அதிநவீன இணைய இணைப்பை வழங்கும் வகையில் SLT-MOBITEL Enterprise, Starlink உடன் மறுவிற்பன

Jun 11, 2026 - 10:50 AM -

0

வர்த்தகங்கள் மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு அதிநவீன இணைய இணைப்பை வழங்கும் வகையில் SLT-MOBITEL Enterprise, Starlink உடன் மறுவிற்பன
Mobitel inner

இலங்கையிலுள்ள வர்த்தகங்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தரளவிலான தொழில்முயற்சியாண்மைகளுக்கு அதிநவீன இணைய இணைப்பை வழங்குவதற்காக, SLT- MOBITEL Enterprise, SpaceX நிறுவனத்தின் Starlink உடன் வரலாற்றுச் சிறப்புமிக்க மறுவிற்பனையாளர் கூட்டாண்மை ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், அண்மையில் நடைபெற்ற இணையவழி கையெழுத்திடும் நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது. 

Starlink இன் low‑earth‑orbit (LEO) செய்மதி வலையமைப்பினூடாக அதிவேக, குறைந்த தாமதத்துடனான இணைப்பு வசதி எந்தப்பகுதிக்கும் வழங்கப்படுகிறது. குறிப்பாக, பாரம்பரிய வலையமைப்புகளால் சென்றடைய முடியாத, பின்தங்கிய, கிராமிய அல்லது புவியியல் ரீதியில் சவால்கள் நிறைந்த பகுதிகளில் இயங்கும் வியாபாரங்களுக்கு பயனளிப்பதாக அமைந்திருக்கும். இத்தொழில்நுட்பம், மிகவும் கடினமான நிலப்பரப்புகளில் கூட வேகமான மற்றும் நம்பகமான இணைப்பை உறுதிப்படுத்துகின்றது. 

இந்த உடன்படிக்கையுடன், SLT-MOBITEL இனால் தற்போது Starlink இன் மேம்படுத்தப்பட்ட செய்மதி இணையத் தீர்வுகள் நேரடியாக நாடு முழுவதையும் சேர்ந்த வர்த்தகங்கள் மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. 

இந்த ஒப்பந்தம், இலங்கையின் தொலைத்தொடர்புத்துறையின் அடுத்த யுகத்தை நோக்கி வழிநடத்துவதில் SLT-MOBITEL கொண்டுள்ள தலைமைத்துவத்தை வெளிப்படுத்துகின்றது. Starlink ஊடாக, இந்நிறுவனம் நாடளாவிய ரீதியிலான தனது சேவையின் எல்லையை மேலும் விரிவுபடுத்துவதுடன், சேவைத் தொடர்ச்சியையும் உறுதிப்படுத்துகின்றது. அத்துடன், தரைவழி வலையமைப்புகளால் சென்றடைய முடியாத பகுதிகளுக்கு மீள்திறன்மிக்க, fully managed enterprise connectivity ஐ வழங்குவதன் மூலம், வணிகங்களுக்கான நம்பகமான டிஜிட்டல் அணுகலை இது சாத்தியமாக்குகின்றது. 

செய்மதி அடிப்படையிலான காப்பு இணைப்பு மூலமாக, வர்த்தகங்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளின் தடையற்ற செயல்பாடுகளுக்கான அணுகலைப் பெறுகின்றன. இது இயற்கை அனர்த்தங்கள் அல்லது வலையமைப்புத் தடங்கல்களின் போது செயலிழப்பு நேரத்தை பெருமளவில் குறைத்து, வருவாய் மற்றும் செயல்பாடுகள் ஆகிய இரண்டையும் பாதுகாக்கின்றது. மிகக் குறைந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய Starlink இன் விரைவான சேவை நிறுவல் முறையானது, தொலைதூர அல்லது தற்காலிக இடங்களில் துரிதமான செயல்பாட்டுத் தொடக்கத்தை வழங்குகின்றது. அத்துடன், இதன் சர்வதேச தரத்திலான செயல்திறனானது, அதிமுக்கிய செயல்பாடுகள், IoT தொழில்நுட்பப் பயன்பாடுகள், கடல்சார் மற்றும் நடமாடும் தீர்வுகள் மற்றும் சீரான, உயர்தர இணைய இணைப்பைக் கோரும் களச் செயற்பாடுகளுக்கு பேராதரவாக அமைகின்றது. 

SLT-MOBITEL இன் Enterprise Business பிரிவின் பிரதம வணிக அதிகாரி லக்மால் ஜயசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் டிஜிட்டல் கட்டமைப்புக்கு (digital ecosystem) உயர் செயல்திறன்மிக்க டிஜிட்டல் தீர்வுகளை வழங்குவதில் இந்த ஒப்பந்தம் புதியதொரு அத்தியாயத்தைத் தோற்றுவிக்கிறது. Starlink இன் அதிநவீன செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை, SLT-MOBITEL இன் நம்பகமான சேவைகளுடன் ஒன்றிணைப்பதன் ஊடாக, பெருநிறுவனங்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாண்மைகளுக்கு நாங்கள் இணையற்ற இணைய இணைப்பின் மூலம் வலுவூட்டுகின்றோம். அத்துடன், தேசிய டிஜிட்டல் உள்ளடக்கம், வணிகத் தொடர்ச்சி மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கான எங்களது அர்ப்பணிப்பை இவ்வொப்பந்தம் மேலும் ஊர்ஜிதப்படுத்துவதுடன், இலங்கை வணிகங்கள் டிஜிட்டல் உலகில் திறம்பட போட்டியிட்டு செழிக்கவும் உறுதுணையாக அமைகின்றது.” என்றார்.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara