Header Logo

செய்திகள்
அங்கொட தேசிய தொற்று நோயியல் நிறுவனத்திற்கு சர்வதேச அங்கீகாரம்

Jun 11, 2026 - 04:36 PM -

0

அங்கொட தேசிய தொற்று நோயியல் நிறுவனத்திற்கு சர்வதேச அங்கீகாரம்

டெங்கு நோய் தொடர்பான கூட்டு சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையமாக உலக சுகாதார அமைப்பினால் (WHO) அங்கொட தேசிய தொற்று நோயியல் நிறுவனம் (IDH) பெயரிடப்பட்டுள்ளது.

 

இலங்கையின் சுகாதாரத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அங்கொட தேசிய தொற்றுநோய் தடுப்பு நிறுவனத்திற்கு உலக சுகாதார அமைப்பு இந்தச் சிறப்பு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

 

இதன்படி, டெங்கு நோய் முகாமை குறித்த பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான உலக சுகாதார அமைப்பின் கூட்டு மையமாக தேசிய தொற்றுநோய் தடுப்பு நிறுவனம் பெயரிடப்பட்டுள்ளது.

 

இலங்கையில் இந்த கௌரவத்தைப் பெற்ற முதலாவது வைத்தியசாலை அங்கொட தேசிய தொற்று நோயியல் நிறுவனமாகும்.

 

இது வைத்தியசாலையின் நிர்வாக மற்றும் மருத்துவக் குழுவினரின் பல வருட தொடர்ச்சியான முயற்சி மற்றும் அர்ப்பணிப்பின் விளைவாகக் கிடைத்த ஒரு மதிப்புமிக்க வாய்ப்பாகும்.

 

இதுவரை காலமும் இலங்கையின் சுகாதாரப் பணியாளர்கள் கல்வி கற்பதற்காக ஏனைய நாடுகளுக்குச் சென்று வந்த நிலையில், இந்த மையம் இலங்கையில் நிறுவப்பட்டதன் பின்னர், ஏனைய நாடுகளின் சுகாதாரப் பணியாளர்கள் டெங்கு நோய் முகாமைத்துவம் தொடர்பான பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதற்கும், ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும் நம் நாட்டிலேயே வாய்ப்புக் கிடைக்கிறது.

 

இதற்கான ஒரு பூர்வாங்கத் தயாரிப்பாக, தேசிய தொற்றுநோய் தடுப்பு நிறுவனத்தினால் நிறுவப்பட்ட ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் (CeRT) மூலம் பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளுக்கு டெங்கு நோய் முகாமைத்துவம் குறித்த தத்துவார்த்த மற்றும் மருத்துவ அறிவை வழங்கும் பணிகள் தற்போது ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

டெங்கு நோய் முகாமைக்கான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமாக அங்கொட தேசிய தொற்று நோயியல் நிறுவனத்திற்கு இந்த அங்கீகாரம் 4 ஆண்டுகள் காலப்பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அடுத்த நான்கு ஆண்டுகளில் வைத்தியசாலை எட்ட வேண்டிய சில இலக்குகளையும் உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

 

அதன்படி, வருடாந்தம் அதன் முன்னேற்றம் குறித்த அறிக்கைகளை தேசிய தொற்றுநோய் தடுப்பு நிறுவனம் உலக சுகாதார அமைப்பிற்கு வழங்க வேண்டும் என்பதுடன், அந்த இலக்குகளைச் சரியான முறையில் பூர்த்தி செய்வதன் மூலம் மட்டுமே அடுத்த 4 ஆண்டுகளுக்கும் உலக சுகாதார அமைப்பின் கூட்டு மையமாக தேசிய தொற்றுநோய் தடுப்பு நிறுவனம் தொடர்ந்து பெயரிடப்படும்.

 

அவற்றைச் சாதிப்பதற்கான உலக சுகாதார அமைப்பின் தொடர்ச்சியான ஆதரவும் அங்கொட தேசிய தொற்று நோயியல் நிறுவனத்திற்குக் கிடைக்கும்.

 

அதன் தொடக்கமாக, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மாலைதீவு மற்றும் நேபாளத்தின் சுகாதார அதிகாரிகளைப் பயிற்சிப் பட்டறைகளில் இணைத்துக் கொள்ள தேசிய தொற்றுநோய் தடுப்பு நிறுவனம் எதிர்பார்க்கிறது.

 

எபோலா உள்ளிட்ட கடுமையான தொற்றுநோய்களைப் பரிசோதிப்பதற்காக நவீன ஆய்வகக் கட்டிடம் ஒன்றும் வைத்தியசாலைக்குள் கட்டப்பட்டு வருவதுடன், இந்த ஆண்டுக்குள் அதனைச் சிகிச்சை சேவைகளுக்காக இணைத்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அங்கொட தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஏ.பி. சந்தநாயக்க தெரிவித்தார்.

 

தேசிய தொற்றுநோய் தடுப்பு நிறுவனம் டெங்கு நோய் முகாமைத்துவம் குறித்த பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான உலக சுகாதார அமைப்பின் கூட்டு மையமாகப் பெயரிடப்பட்டமை குறித்துப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கான விசேட செய்தியாளர் சந்திப்பு இன்று (11) அங்கொட தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் நடைபெற்றது.


MOST READ

காணொளி
மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்!

குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்!

நெல்லுக்கான உத்தரவாத விலையை உடன் வழங்குங்கள் - இளையதம்பி சிறிநாத்

நெல்லுக்கான உத்தரவாத விலையை உடன் வழங்குங்கள் - இளையதம்பி சிறிநாத்

செம்மணி இன்று 07 என்புக் கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன!

செம்மணி இன்று 07 என்புக் கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன!

எதிர்க்கட்சியினர் அச்சமடைந்துள்ளனர்!

எதிர்க்கட்சியினர் அச்சமடைந்துள்ளனர்!

ஏற்றுமதியாளர்களை முடக்கி நிலையான அபிவிருத்தியா?

ஏற்றுமதியாளர்களை முடக்கி நிலையான அபிவிருத்தியா?

ஜீவந்த பீரிஸின் கருத்துக்கு குழு ஆதரவு!

ஜீவந்த பீரிஸின் கருத்துக்கு குழு ஆதரவு!

மீன்பிடித்துறை அமைச்சரால், கொந்தளித்த அர்ச்சுனா

மீன்பிடித்துறை அமைச்சரால், கொந்தளித்த அர்ச்சுனா

title