Header Logo

சினிமா
மகளிடம் பாரதி ராஜா கூறிய கடைசி ஆசை!

Jun 11, 2026 - 04:35 PM -

0

மகளிடம் பாரதி ராஜா கூறிய கடைசி ஆசை!

இயக்குனர் பாரதிராஜாவின் மரணம் ஒட்டுமொத்த தமிழக மக்களையும், திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், இவரது கடைசி ஆசையைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். 

இயக்குனர் பாரதி ராஜாவிற்கு குடும்பத்தின் மீது பாசம் அதிகமாக இருந்ததால் தனது சின்னசாமி என்ற பெயரை பாரதி ராஜா என்று மாற்றியுள்ளார். 

அதாவது இவரது தங்கை பாரதி, தம்பி ஜெயராஜ் என்பதை இணைத்து பாரதிராஜா என்று வைத்திருந்தார். 16 வயதினிலே படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக வந்த இவர், இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். 

பாரதிராஜா என்ற பெயரைக் கேட்டாலே தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்கள் தான் ஞாபகத்திற்கு வரும். அந்த அளவிற்கு தனது படத்தில் கிராமத்தினை நகரத்திற்கு எடுத்து வந்தார். 

சென்னைக்கு வந்து நகரவாசியாக இருந்தாலும் பாரதிராஜா தனது கிராமத்தையும், உறவுகளையும் மறக்காமல் இருந்து வந்துள்ளார். 

அடிக்கடி ஊருக்கு சென்று உறவினர்களுடன் சாப்பிடுவது, நேரம் செலவிடுவது என்று செய்து வந்துள்ளார். தற்போது இவரது அடக்கமும் சொந்த ஊரான தேனியில் தான் நடைபெறுகின்றது. 

இயக்குனர் பாரதிராஜா மகனின் இறப்பிற்கு பின்பு மனதளவிலும், உடல் அளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் அவரது மகள் ஜனனியின் வீட்டில் மலேசியாவில் தங்கி சிகிச்சை பெற்றார். 

அப்பொழுது தனது கடைசி ஆசையையும் மகள் ஜனனியிடம் கூறியுள்ளார். அதாவது தான் இறந்த பின்பு சென்னையில் அடக்கம் செய்யாமல் தனது சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும். 

அங்கு ஓய்வெடுக்கவே தான் விரும்புவதாகவும், தேனி மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள காட்ரோடு பண்ணை தோட்டத்தில் தனது உடலை அடக்கம் செய்ய கூறியுள்ளார். 

அங்கு அடக்கம் செய்ததால் தான் தான் தனது தாய் மடியில் உறங்குவது போன்ற உணர்வு ஏற்படும் என்று பாரதிராஜா உருக்கமாக கூறியிருந்தாராம். 

இதனைக் கேட்ட மகள் இப்போதே ஏன் அப்பா இப்படி பேசுகிறீர்கள் என்றும் உங்கள் ஆசைப்படியே தான் நடக்கும் என்று கூறியுள்ளார். பாரதி ராஜாவின் ஆசையின் படியே அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்படுகின்றது. 

அங்கு ஆயிரக்கணக்கில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.


MOST READ

காணொளி
மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்!

குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்!

நெல்லுக்கான உத்தரவாத விலையை உடன் வழங்குங்கள் - இளையதம்பி சிறிநாத்

நெல்லுக்கான உத்தரவாத விலையை உடன் வழங்குங்கள் - இளையதம்பி சிறிநாத்

செம்மணி இன்று 07 என்புக் கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன!

செம்மணி இன்று 07 என்புக் கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன!

எதிர்க்கட்சியினர் அச்சமடைந்துள்ளனர்!

எதிர்க்கட்சியினர் அச்சமடைந்துள்ளனர்!

ஏற்றுமதியாளர்களை முடக்கி நிலையான அபிவிருத்தியா?

ஏற்றுமதியாளர்களை முடக்கி நிலையான அபிவிருத்தியா?

ஜீவந்த பீரிஸின் கருத்துக்கு குழு ஆதரவு!

ஜீவந்த பீரிஸின் கருத்துக்கு குழு ஆதரவு!

மீன்பிடித்துறை அமைச்சரால், கொந்தளித்த அர்ச்சுனா

மீன்பிடித்துறை அமைச்சரால், கொந்தளித்த அர்ச்சுனா

title