Jun 11, 2026 - 09:47 PM -
0
அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் வளாகத்தில் அபாயகரமான பொருட்கள் சம்பந்தப்பட்ட சம்பவம் மற்றும் காற்றின் தரம் குறைவடைந்துள்ளமை போன்ற காரணங்களால், அதன் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த பணியாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பென்டகனின் உள்முகக் கண்காணிப்பு அமைப்புகள், அங்குள்ள காற்றின் தரத்தில் ஏதோவொரு பிரச்சினை நிலவுவதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பென்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள தீவிரம் மற்றும் பாதிப்புகள் குறித்து தற்போது பாதுகாப்புப் பிரிவினரால் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

