Header Logo

செய்திகள்
உலக சந்தையில் கடும் வீழ்ச்சியடைந்த மசகு எண்ணெய் விலை

Jun 15, 2026 - 07:29 AM -

0

உலக சந்தையில் கடும் வீழ்ச்சியடைந்த மசகு எண்ணெய் விலை

100 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவும் ஈரானும் அறிவித்ததை அடுத்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. 

அதன்படி பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 3.55% சரிந்து ஒரு பீப்பாய் 83.77 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. 

டபிள்யூ.டி.ஐ மசகு எண்ணெய் 4.10% சரிந்து 80.78 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது. 

அத்துடன் ​மேர்பன் ரக மசகு எண்ணெய் 4.23 சதவீதம் வீழ்ச்சியடைந்து 83.02 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகின்றது. 

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரினால் கடந்த மே மாதம் மசகு எண்ணெய் விலை உச்சம் தொட்டிருந்தது. 

இந்நிலையில், குறித்த அமைதி ஒப்பந்தம் தொடர்பில் அவ்வப்போது எழுந்த வதந்திகள் காரணமாக மசகு எண்ணெய் விலை படிப்படியாக வீழ்ச்சியடைந்தது. 

அதனடிப்படையில் ஈரானும், அமெரிக்காவும் இன்றைய தினம் சமாதாக உடன்படிக்கை தொடர்பான அறிவிப்பை வௌியிட்டதை தொடர்ந்து மசகு எண்ணெய் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. 

இருநாடுகளுக்கும் இடையில் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டால் மசகு எண்ணெய் விலை மேலும் குறைவடையும் சாத்தியம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!