Header Logo

வடக்கு
யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

Jun 15, 2026 - 10:53 AM -

0

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, இன்று (15) உடன் 36 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், தம்மை மீள் குடியேற்ற கோரி இன்று யாழ். மாவட்ட செயலகம் முன்பாகவும் பலாலி சந்திக்கு அருகிலும் போராட்டங்களை முன்னெடுத்தனர். 

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி வலி. வடக்கு பிரதேச மக்கள் அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 

இந்நிலையில் இன்று, அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 

யுத்தம் நிறைவடைந்து 17ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் அப்பகுதி மக்கள் இன்னமும் மீள் குடியேற அனுமதிக்காது, அப்பகுதி மக்களின் காணிகளில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். 

இந்நிலையில் தமது காணிகளில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றி, தம்மை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும் என யாழ். மாவட்ட செயலகம் முன்பாகவும் பலாலி சந்திக்கு அருகிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 

இதன்போது தமது காணி விடுவிப்பு தொடர்பான கோரிக்கை அடங்கிய மகஜர் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது. 

அத்துடன் ஆளுநரிடமும் சென்று மகஜர் கையளித்தனர். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள், மத தலைவர்களிடமும் மகஜர் கையளித்தனர். 

குறித்த போராட்டத்தில் காணி உரிமையாளர்கள், மத தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் பிரதேச சபை தவிசாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

--


MOST READ

காணொளி
யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

title