Header Logo

விளையாட்டு
ஒரு அகதியின் கைமாறு!

Jun 15, 2026 - 01:03 PM -

0

ஒரு அகதியின் கைமாறு!

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் குரூப் F பிரிவு ஆட்டத்தில் துனிசியா - ஸ்வீடன் அணிகள் மோதின. 

மெக்சிகோவின் குவாடலூப் நகரில் நடந்த இந்த போட்டியின் 7 ஆவது நிமிடத்திலேயே ஸ்வீடன் நட்சத்திர வீரர் யாசின் அயாரி கோல் அடித்தார். 

ஆனால் முதல் பாதி முடிவடையச் சில நிமிடங்களுக்கு முன்பு துனிசியா வீரர் உமர் ரெகிக் கோல் விளாச ஸ்கோர் 2 - 1 என வந்து நின்றது. 

இரண்டாவது பாதியில் சுதாரித்த ஸ்வீடன் 59 ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க 3 - 1 என வலுவான நிலையை அவ்வணி எட்டியது. 

ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் 4 ஆவது கோல் மற்றும் யாசின் அயாரி அடித்த 5 ஆவது கோல் என அணியின் கோல் கணக்கு 5 ஆக உயர, 5-1 என்ற புள்ளிகணக்கில் துனிசியாவை வீழ்த்தி ஸ்வீடன் வெற்றி பெற்றது. 

கடந்த 2018 தொடரில் ஆடிய ஸ்வீடன் 2022 இல் தகுதி பெறவில்லை. இதனால் சுமார் 8 ஆண்டுகள் கழித்து அதாவது சரியாக 2,893 நாட்களுக்குப் பிறகு உலகக் கிண்ணத்தில் ஸ்வீடன் அணி பங்கெடுத்தது. 

ஸ்வீடன் சார்பாக ஆட்டத்தின் 7 ஆவது நிமிடத்திலேயே கோல் அடித்தவர் 22 வயதான யாசின் அயாரி. 

அத்துடன் ஸ்வீடன் வரலாற்றில் மிக இளவயதில் உலகக் கிண்ணத்தில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். 

அவர் கோல் அடித்தவுடன் சக வீரர்கள் ஓடிவந்து அவரை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய போதும் யாசின் ஆயாரி எவ்வித கொண்டாடத்திலும் ஈடுபடாமல் அமைதியாக காணப்பட்டார். அவர் கொண்டாட்டங்களை வெளிப்படையாக தவிர்த்துள்ளார். 

யாசின் ஸ்வீடனில் பிறந்து வளர்ந்தவர் என்றபோதும் அவரின் தந்தை அஸ்ஸூஸ் அயாரி துனிசிய நாட்டவர் ஆவார். யாசினின் தாய் மொராக்கோவை சேர்ந்தவர். 

எனவே யாசின் அயாரிக்கு மொத்தம் மூன்று நாடுகளின் சார்பில் விளையாடும் தகுதியும் வாய்ப்பும் கிடைத்தது. யாசினுக்கு துனிசியா அணியில் வாய்ப்பு வந்தபோது அவர் அதை ஏற்க நினைத்தார். 

ஆனால் யாசினின் தந்தை அவரை தடுத்துள்ளார். இதுகுறித்து யாசினின் தந்தை முன்னர் அளித்த பேட்டியில், 

"என் மகனுக்குத் துனிசியாவுக்காக விளையாடத்தான் ஆசை இருந்தது. ஆனால், நான்தான் அவனை ஸ்வீடன் நாட்டின் சார்பில் விளையாடுமாறு கேட்டுக்கொண்டேன். 

ஏனெனில் அகதியாக வந்த எங்களை அன்போடு வரவேற்று என் மகனின் திறமையை அடையாளம் கண்டு அவனை இந்தளவிற்கு வளர்த்தெடுத்தது ஸ்வீடன் தான். 

எனவே அந்த நாட்டிற்கு திரும்பச் செய்ய வேண்டியது அவனது கடமை" என தெரிவித்திருந்தார்.


MOST READ

காணொளி
நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

title