Header Logo
SLIC
மலையகம்
காணாமல் போன குடும்பஸ்தர் ஆற்றில் சடலமாக மீட்பு!

Jun 15, 2026 - 02:29 PM

காணாமல் போன குடும்பஸ்தர் ஆற்றில் சடலமாக மீட்பு!
Mobitel Inner 1278
EDEX Inner

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆட்லோ தோட்டப் பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து 74 வயதுடைய முதியவர் ஒருவரின் சடலம் இன்று (15) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 74 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

குடும்பத்தினரின் தகவலின்படி, குறித்த முதியவர் கடந்த 14 ஆம் திகதி மாலை சுமார் 7 மணியளவில் தனது வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து உறவினர்கள் மற்றும் தோட்ட மக்கள் இணைந்து அவரைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

இதன்போது, அவரது வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆற்றுப் பகுதியில் அவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பின்னர் பொதுமக்களின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. 

சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த அக்கரப்பத்தனை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழப்புக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையின் பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278