Header Logo

சினிமா
மமிதா பைஜூ குரலில் 'விஸ்வநாதன் அன் சன்ஸ்' பாடல்!

Jun 15, 2026 - 03:49 PM -

0

மமிதா பைஜூ குரலில் 'விஸ்வநாதன் அன் சன்ஸ்' பாடல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45 ஆவது படமான ‘கருப்பு’ வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூல் குவித்து வருகிறது. 

இதனை தொடர்ந்து, வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 46 ஆவது படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘விஸ்வநாத் அன் சன்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா தாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

இதற்கிடையே ‘விஸ்வநாத் அன் சன்ஸ்’ படம் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாவதை தொடர்ந்த இப்படத்தின் டீசர், டிரெய்லர், பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. 

இந்த நிலையில், ‘விஸ்வநாத் அன் சன்ஸ்’ படத்தின் முதல் பாடல் நாளை மறுநாள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், ஜி.வி. பிரகாஷ் வெங்கி அட்லூரியுடன் தொலைபேசியில் பேசும்போது, ​​முதல் சிங்கிளுக்கான பாடகரை இன்னும் இறுதி செய்யவில்லை என்று கூறுகிறார். பின்னர் அந்த இயக்குநர், இசையமைப்பாளரின் ஸ்டுடியோவிற்கு சரியான நபரை அனுப்புவதாகக் கூறுகிறார். 

ஆனால் அங்கே வாசலில் மமிதா பைஜூ நிற்பதை ஜி.வி.பிரகாஷ் காண்கிறார். ஆரம்பத்தில் சந்தேகப்பட்டாலும், ஜி.வி. பிரகாஷ் மமிதாவின் குரலில் பாடலைப் பதிவு செய்யத் தயாராகிறார். 

ஆனால் மமிதா பைஜூ பாடுவதற்கான வாய்ப்பை மறுத்து, அந்தப் பாடலுக்கு நடனமாடுவதற்காக மட்டுமே தான் ஸ்டுடியோவிற்கு வந்திருப்பதாகவும், அதுவே தனது பலம் என்றும் கூறுகிறார். படத்தின் முதல் பாடலை வெளியிட இசையமைப்பாளர் யாரைத் தேர்ந்தெடுத்தார் என்பது சஸ்பென்சாக உள்ளது.


MOST READ

காணொளி
நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

title