Jun 15, 2026 - 10:33 PM -
0
அத்தனகல்ல, கரஸ்னாகல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்புப் பணி காரணமாக, நாளை (16) முதல் பல பகுதிகளில் 19 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, நாளை செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி முதல் அதாவது புதன்கிழமை (17) அதிகாலை 3.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படும்.
மினுவாங்கொடை வலயம்: மினுவாங்கொடை, அஸ்கிரிய, உடுகம்பொல, ஓபாத மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள்.
கம்பஹா வலயம்: கம்பஹா மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள், கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள், வெலிவேரிய, பெலும்மஹர, ரதுபஸ்வல மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள்.
மஹர வலயம்: மஹர பிரதேச சபைக்குட்பட்ட மாஹரகம, சிவுரலுமுல்ல, கிரிகித்த, கினிகம, எட்டிகெஹெல்கல்ல மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள்.
அத்தனகல்ல வலயம்: ரன்பொகுணகம வீட்டுத் திட்டம், ஊராபொல, அத்தனகல்ல, படலீய, வதுபிட்டிவல மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள்.
நிட்டம்புவ வலயம்: நிட்டம்புவ, வேயங்கொடை, கலகெடிஹேன, திஹாரிய, நைவல மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள்.
நீர் விநியோகம் நிறுத்தப்படுவதால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
எனவே, குறிப்பிட்ட காலப்பகுதிக்குத் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளுமாறும், நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் சபை, பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை 1939 என்ற அவசர அழைப்பு இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியும்.

