Header Logo

இந்தியா
கரப்பான்பூச்சி கட்சித் தலைவருக்கு கன்னத்தில் பளார்!

Jun 16, 2026 - 09:30 AM -

0

கரப்பான்பூச்சி கட்சித் தலைவருக்கு கன்னத்தில் பளார்!

இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்தின் ஒற்றை விமர்சனத்தால் உருவாகி, தற்போது இந்தியாவின் பல்வேறு முக்கியப் பிரச்சினைகளுக்கு எதிராக பேசிவரும் முக்கிய அரசியல் நய்யாண்டி இயக்கம்தான் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி. 

இக்கட்சி நீட்தேர்வு குளறுபடி, சிபிஎஸ்இ ஓஎஸ்எம் உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. 

அந்தவரிசையில் நேற்று (15) ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே உரையாற்ற வந்தநிலையில், அவரது ஆதரவாளர்கள் அவரைத் தங்களது தோள்களில் தூக்கி வந்தனர். 

அப்போது கூட்டத்தில் புகுந்த சிலர், திடீரென அவரது கழுத்தில் இருந்த துணியை இழுத்து, அவரது கன்னத்தில் பலமுறை மாறி மாறி அறைந்து, கீழே இழுக்க முயன்றனர். 

இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும், ஆதரவாளர்களுக்கும், தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பொலிஸார் உடனடியாகத் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

மேலும் இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதனிடையே இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அபிஜித் தீப்கே, 

“இவையெல்லாம் நம்மைப் பயமுறுத்துவதற்கும், அச்சுறுத்துவதற்கும், பிரச்சினையிலிருந்து நம் கவனத்தைத் திசை திருப்புவதற்கும் எடுக்கப்படும் முயற்சிகள். நாம் பிரச்சினையிலிருந்து சற்றும் திசை திரும்பக்கூடாது. தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதுதான் எங்களின் ஒரே கோரிக்கை.” என தெரிவித்துள்ளார்.

MOST READ

காணொளி
செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

title