Header Logo
SLIC
பல்சுவை
மாம்பழம் சாப்பிட்டவுடன் இந்த 8 உணவுகளை சாப்பிடாதீர்கள்!

Jun 16, 2026 - 02:19 PM

மாம்பழம் சாப்பிட்டவுடன் இந்த 8 உணவுகளை சாப்பிடாதீர்கள்!
Mobitel Inner 1278
EDEX Inner

ஒரு சில உணவுகளுடன் சேர்த்து மாம்பழத்தை சாப்பிடவேக் கூடாது என்கிறார்கள் வைத்தியர்கள் அது ஏன், என்னென்ன உணவுகளையெல்லாம் மாம்பழத்தோடு சேர்த்து சாப்பிடக்கூடாது என்பது பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். 

இந்த சீசன், அந்த சீசன் என்றெல்லாம் இல்லை, எல்லா சீசனும் மாம்பழ சீசன்தான். அந்த அளவிற்கு நம் ஊரில் மாம்பழங்கள் ஃபேமஸ். அதைவிட மாம்பழ பிரியர்கள் ஃபேமஸ். ஜூஸாக, ஐஸ்க்ரீமாக, இனிப்பாக, பச்சடி - குழம்பு - ஊறுகாய் என எண்ணற்ற வழிகளில் மாம்பழங்களை சாப்பிடலாம். அட இது எதுவுமே வேண்டாமென சொல்லிவிட்டு அப்படியே பழமாக சாப்பிடுவோரும் இங்கு உண்டு. ஜூஸியான மாம்பழத்தின் அந்த ஃப்ளேவர் யாருக்குத்தான் பிடிக்காது! ஆனால் இங்குதான் ட்விஸ்ட். மாம்பழத்தை எப்படி வேண்டுமெனாலும் சாப்பிடலாம், ஆனால் ஒருசில உணவுகளுடன் மட்டும் சேர்த்து சாப்பிடவேக் கூடாது என்கிறார்கள் வைத்தியர்கள். 

மாம்பழத்துடன் சேர்த்து தயிர், காரமான உணவுகள், மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றைச் சாப்பிடக் கூடாது. ஏனெனில் என்னதான் மாம்பழம் ஆரோக்கியமான பழமாக இருந்தாலும், சில குறிப்பிட்ட உணவுகளோடு அதைச் சேர்த்துச் சாப்பிடும் போது செரிமானப் பிரச்சனைகள் மற்றும் உடல்நல உபாதைகள் ஏற்படலாம். 

1) தயிர் - மாம்பழத்தையும் தயிரையும் ஒன்றாகவோ அல்லது அடுத்தடுத்து உடனையோ சாப்பிடக் கூடாது. ஏனெனில் மாம்பழம் உடலுக்கு உஷ்ணம் தரும் தன்மை கொண்டது, அதுவே தயிர் குளிர்ச்சித் தன்மை கொண்டது. இவை இரண்டும் வயிற்றில் சேரும் போது செரிமானப் பாதிப்பு, வாயுத் தொல்லை மற்றும் தோல் ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற பிரச்சனைகளை உண்டாக்கலாம். 

2) காரமான உணவுகள் - மாம்பழம் சாப்பிடும் போது அல்லது சாப்பிட்ட உடனே காரமான உணவுகள் மற்றும் மிளகாய் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரண்டுமே உடலில் வெப்பத்தை அதிகமாக்கும். இதனால் நெஞ்செரிச்சல், அசிடிட்டி மற்றும் வயிற்று வலி ஏற்படலாம். 

3) சோடா போன்ற செயற்கை குளிர்பானங்கள் - மாம்பழம் சாப்பிட்ட பிறகு கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்களைக் குடிக்கக் கூடாது. ஏனெனில் மாம்பழம் மற்றும் குளிர்பானங்கள் இரண்டிலுமே சர்க்கரை அளவு மிக அதிகம். இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சட்டென்று உயர்ந்துவிடும். மேலும் இது வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும். 

4) பாகற்காய் - மாம்பழமும் பாகற்காயும் முற்றிலும் நேர் எதிர் சுவை கொண்டவை. மாம்பழம் சாப்பிட்ட உடனேயே பாகற்காய் சாப்பிட்டால் வயிற்றில் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு, வாந்தி அல்லது கடுமையான வயிற்று வலி வரலாம். 

5) புளிப்புச் சுவை கொண்ட பழங்கள் - மாம்பழத்துடன் ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி, தர்பூசணி போன்ற பழங்களைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் அது உடலின் பி.எச். (pH) சமநிலையைக் கெடுத்துவிடும். இது, செரிமான ஆற்றலைப் பாதிக்கும். 

6) தண்ணீர் குடித்தல் - மாம்பழம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது. ஏனெனில் பழங்களில் ஏற்கனவே நீர்ச்சத்து அதிகம் இருக்கும். அப்படி இருக்கையில் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால், அது வயிற்றுப்போக்கு அல்லது செரிமானக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும். மாம்பழம் சாப்பிட்டு குறைந்தது 30 நிமிடங்கள் கழித்தே தண்ணீர் குடிக்க வேண்டும். 

7) அதிக கொழுப்புள்ள உணவுகள் - சுவை மிகுந்த மாம்பழத்தை சாப்பிட்டதும், வறுத்த உணவுகள், கொழுப்பு நிறைந்த இறைச்சிகள், நொறுக்கு தீணிகள் போன்ற அதிக கொழுப்புள்ள உணவுகளை உடனடியாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அதிக கொழுப்புள்ள உணவுகள் செரிமானம் ஆவதற்கு நேரமாகும். இதனால் மாம்பழம் செரிமானம் ஆக நேரம் பிடிக்கும். இதன் காரணமாக வயிறு முழுதும் நிரம்பியுள்ளதை போல் உணர்வீர்கள். 

8) பால் பொருட்கள் - பால் பொருட்களில் அதிகளவு லாக்டிக் அசிட் உள்ளது. இது மாம்பழத்தில் இயற்கையாகவே இருக்கக்கூடிய சர்க்கரையை நொறுக்கும் நொதிகளோடு கலப்பதால், நமக்கு செரிமானப் பிரச்சனைகளும் வயிறு உப்புசமும் உண்டாகிறது. எனவே மாம்பழத்தின் தனித்துவ சுவையை நீங்கள் முழுமையாக உணர வேண்டுமென்றால், ஒரு மணி நேரம் கழித்தே இதுபோன்ற பால் பொருட்களை சாப்பிடுங்கள்.


MOST READ

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278