Header Logo

செய்திகள்
மீகொடை தன்சல் விபத்து: சந்தேகநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

Jun 16, 2026 - 05:49 PM -

0

மீகொடை தன்சல் விபத்து: சந்தேகநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

கடந்த வெசாக் தினத்தன்று மீகொடை  பகுதியில் நடைபெற்ற தன்சல் வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது கெப் ரக வாகனத்தைச் செலுத்தி, 6 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான விபத்துச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த நான்கு சந்தேகநபர்களும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (16) ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதவான் ரஜிந்ரா ஜயசூரிய இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்த நீதிமன்ற விசாரணையின் போது, விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவரது குடும்பத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த ஏனைய ஐந்து நபர்களின் குடும்பங்களுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் நட்டஈடு வழங்க பிரதிவாதிகள் தரப்பு உடன்பாடு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கையை அடுத்த வழக்குத் தவணையின் போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபர்களை எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

MOST READ

காணொளி
செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

title