Header Logo

இந்தியா
விபச்சார விடுதிகள் இயங்கினால் மட்டுமே பாலியல் குற்றங்களை குறைக்க முடியும்!

Jun 16, 2026 - 06:31 PM -

0

விபச்சார விடுதிகள் இயங்கினால் மட்டுமே பாலியல் குற்றங்களை குறைக்க முடியும்!

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த, அரசு அனுமதியோடு விபச்சார விடுதிகள் இயங்கினால், அந்தக் குற்றங்கள் குறையும் என்றுக் கூறியுள்ளார் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சித் தலைவர் காயல் அப்பாஸ். 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி அருகே உள்ள சிப்கார்ட்டில் பணிபுரிந்து வந்த வட மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மூன்று வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்யபட்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. 

மேலும் இச்சபவத்தை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் தமிழ்நாட்டில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதனால் பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. 

உயிரிழந்த சிறுமியின் குடும்பதாரர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்களையும் தெரிவித்து கொள்கிறோம். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபா தமிழக அரசு வழங்க வேண்டும். 

சிறுமி பாலியல் மற்றும் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுத்து பிணையில் கூட விடாமல் சாகும்வரை சிறைபடுத்தினால் மட்டுமே இது போன்று, மிகவும் கொடூரமான முறையில் பாலியல் குற்றங்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கும் ஒரு பாடமாக அமையும். 

எனவே கொல்கத்தாவில் சோனா காட்சி மற்றும் மும்பையில் கிரன் சாலை போன்ற இடங்களில் அந்த அந்த அரசு அனுமதியோடு விபச்சார விடுதிகள் இயங்கி வருகின்றன. அந்த மாநிலங்களில் பாலியல் குற்ற சம்பவங்கள் மிகவும் குறைந்து உள்ளன என்பது குறிப்பிடதக்கது. 

இது போன்று தமிழ்நாட்டில் முக்கிய மாநகரங்களில் விபச்சார விடுதிகள் அரசு அனுமதியோடு இயங்கினால் மட்டுமே பாலியல் குற்ற சம்பவங்களை குறைக்க முடியும். மேலும் தமிழ்நாட்டில் இனிவரும் காலங்களில் இது போன்று பாலியல் குற்ற சம்பவங்கள் நடைபெறாம்ல் தடுக்க உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும். 

சிறுமிகள், பெண்களின் பாதுகாப்பை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உறுதி செய்ய வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.


MOST READ

காணொளி
செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

title