Jun 16, 2026 - 08:58 PM -
0
மகளிர் இருபதுக்கு -20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 7ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிராக இலங்கை மகளிர் அணி தற்போது பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வருகிறது. சவுதாம்ப்டனில் உள்ள 'தி ரோஸ் போல்' மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
ஆரம்பத்திலேயே அதிரடி காட்டிய நியூசிலாந்து அணித்தலைவர் மெலி கெர் 45 ஓட்டங்களையும், சோஃபி டிவைன் 45 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு வலு சேர்த்தனர்.
இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய கவிஷா தில்ஹாரி 2 விக்கெட்டுகளையும், மிதாலி அயோத்யா, சுகந்திகா குமாரி, சமரி அத்தபத்து மற்றும் நிமேஷா மீபாகே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 151 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை மகளிர் அணி, தற்போது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இலங்கை மகளிர் அணி: 3.2 ஓவர்கள் நிறைவில் 14 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்பின்றி (8/0) விளையாடி வருகிறது.

