Jun 18, 2026 - 07:33 AM -
0
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 170 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
லக்னோவில் உள்ள ஏகானா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 402 ஓட்டங்களை குவித்தது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அணி தலைவர் ஷுப்மன் கில் 154 ஓட்டங்களயும், விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 125 ஓட்டங்களையும் குவித்தனர்.
பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் நங்கேயாலியா கரோட் 4 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
பின்னர் 403 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 44.3 ஓவர்களில் 232 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் சார்பில் ரஹ்மத் ஷா அதிகபட்சமாக 79 ஓட்டங்களை எடுத்தார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் குர்னூர் பிரார் தலா 3 விக்கெட்டுகளையும், பிரின்ஸ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. முன்னதாக தர்மசாலாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

