Header Logo

விளையாட்டு
கால்பந்து உலகக்கிண்ணத்தில் திகைக்க வைக்கும் நடுவரின் சம்பளம்!

Jun 18, 2026 - 08:09 AM -

0

கால்பந்து உலகக்கிண்ணத்தில் திகைக்க வைக்கும் நடுவரின் சம்பளம்!

23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இந்த உலக கிண்ண போட்டியில் 48 அணிகள் விளையாடுகின்றன. மொத்தம் 104 போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டி தொடங்கியது முதல் ஒவ்வொரு அணியினரும் கோல்களை அடித்து, புதிய புதிய சாதனைகளை படைத்து வருகின்றனர். 

போட்டியில் வீரர்கள் எந்தளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு நடுவர்களின் பணியும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த தொடரில், ஐரோப்பா, ஆசியா, தென் அமெரிக்கா, வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா நாடுகளில் இருந்து நடுவர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். 

போட்டிகளுக்கேற்ப கடந்த 2022 ஆம் ஆண்டில் இருந்து கூடுதலாக 16 நடுவர்கள் போட்டி தொடரில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதன்படி, இந்த போட்டி தொடரில் மொத்தம் 52 நடுவர்கள் இருப்பார்கள். 2 போட்டிகளுக்கு தலா ஒரு நடுவர் என்ற கணக்கில் போட்டிகளை அவர்கள் வழிநடத்தி செல்வார்கள். 

கடந்த முறை நடந்த உலகக் கிண்ண தொடரில் மொத்தம் 69 உதவி நடுவர்கள் இருந்தனர். இந்த முறை கூடுதலாக 19 பேர் சேர்க்கப்பட்டு மொத்தம் 88 உதவி நடுவர்கள் உள்ளனர். 

இதுபோக 30 வீடியோ உதவி நடுவர்கள் பணியாற்றுகிறார்கள். ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு நடுவரும், 4 உதவி நடுவர்களும் செயல்படுவார்கள். நடுவருக்கு ஏறக்குறைய இந்திய மதிப்பில் 94 லட்சம் ரூபா (ஒரு லட்சம் அமெரிக்க டொலர்) சம்பளம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இது தவிர போட்டி கட்டணம், நாக் - அவுட் சுற்றில் இருந்து போனசும் வழங்கப்படும். உதவி நடுவர்களுக்கு 24 லட்சம் ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது.

MOST READ

காணொளி
அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

title