Jun 18, 2026 - 11:10 AM -
0
இலங்கையிலிருந்து நூதனமான முறையில் இந்தியாவிற்குத் தங்கம் கடத்த முயன்ற கும்பல் ஒன்று, இலங்கைச் சுங்கத் திணைக்கள அதிகாரிகளினால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து நேற்று (17) நாகப்பட்டினம் நோக்கிப் பயணிக்கவிருந்த பயணிகள் சிலர் தங்கம் கடத்துவதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், 26 பயணிகள் சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டனர்.
இவர்களில் 17 பேர் இந்தியப் பிரஜைகள் என்றும், 6 பெண்கள் உட்பட 9 பேர் இலங்கைப்பிரஜைகள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தடுத்து வைக்கப்பட்ட 26 பேரும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப் பரிந்துரைக்கப்பட்ட போதிலும், 17 பேரே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டு எக்ஸ்ரே (Scanning) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களில் 17 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், ஆறு பேர் தங்க விழுங்கி உடலுக்குள் மறைத்து வைத்து கடத்த முயன்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தங்கம் கடத்தியவர்களில் நான்கு இந்திய ஆண்களும், இரண்டு இலங்கை பெண்களும் உள்ளடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
--

