Jun 18, 2026 - 01:50 PM -
0
மலையாள நடிகை நஸ்ரியா தமிழில் "ராஜா ராணி, நய்யாண்டி" உள்ளிட்ட படங்களில் நடித்து வரவேற்பு பெற்றார்.
நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சில வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் நடிப்பில் வெளியான "சூட்சும தர்ஷினி" படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் தமிழில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது சோசியல் மீடியா பக்கத்தில், சிவப்பு கொடியை துரத்திச் செல்லும் காளைகளுக்கு பைத்தியம் என்று நான் நினைத்தேன். ஆனால் இப்போது நானும் அதே நிலையில்தான் இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
திடீரென இவர் இப்படி பதிவிட்டுள்ளதால், இவருக்கும் பஹத் பாசிலுக்கும் இடையே ஏதேனும் கருத்து வேறுபாடா என்கிற கோணத்தில் ரசிகர்கள் தங்களது வருத்தத்தையும், கவலையையும் பகிர்ந்து வருகின்றனர்.
அதே சமயம் நஸ்ரியா தற்போது மலையாளத்தில் "எல் கிளாசிகோ" என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் ஸ்பெயின் நாட்டின் பின்னணியை கொண்டது என்றும், அதில் காளை சண்டை மற்றும் கால்பந்து தொடர்பான கதைக்களம் இருப்பதாகவும், அதை குறிப்பிடும் விதமாகத்தான் காளை மற்றும் சிவப்பு கொடி என்கிற வார்த்தைகளை நஸ்ரியா குறிப்பிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
அதனால் இது அந்த படத்திற்கான புரமோஷன் யுக்தியாகத்தான் இருக்கும் என்றும் சினிமா வட்டாரத்தை சேர்ந்த சிலர் கூறி வருகின்றனர்.

