Jun 18, 2026 - 05:37 PM -
0
மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாகவே, இன்று (18) காலை அவர் கைது செய்யப்பட்டார்.

