Header Logo

செய்திகள்
கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

Jun 18, 2026 - 06:18 PM -

0

கைதான  சுகீஸ்வர பண்டார  விளக்கமறியலில்

மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

அவரை கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக, இன்று (18) காலை அவர் கைது செய்யப்பட்டிருந்தார். 

ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவின் ஊழல் எதிர்ப்பு குழுவினால், ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் இடம்பெற்ற பண மோசடி தொடர்பாக மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது. 

அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சுகீஸ்வர பண்டார 2022ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளர்களில் ஒருவராகப் பணியாற்றியுள்ளதுடன், அதே காலப்பகுதியில் அன்றைய ஜனாதிபதி செயலகத்தின் திட்டப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 

அந்த விசாரணைகளின் விளைவாக, ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் அவர் இரண்டு பதவிகளுக்கான சம்பளப் பணத்தைப் பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில், இன்று (18) கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். 

சந்தேகநபர் குறித்த பதவிகளை வகித்துக்கொண்டிருந்த போது, அரச வாகனங்களைத் துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் அதன் ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியமை தொடர்பிலும் அந்தப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ

காணொளி
அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

title