Header Logo

செய்திகள்
தாயின் கண்முன்னே பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் 1 வயது குழந்தை பலி!

Jun 21, 2026 - 09:16 AM -

0

 தாயின் கண்முன்னே பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் 1 வயது குழந்தை பலி!

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள வால்மார்ட் வணிக வளாகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள வால்மார்ட் அங்காடி ஒன்றில் பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதாக அங்குள்ள பொலிஸாருக்கு அவசரத் தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் அங்கிருந்த கார் ஒன்றை சோதனையிட முயன்றனர்.

அப்போது காரில் இருந்தவர்கள், தங்களை நோக்கி காரை மோத வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தற்காப்பிற்காக பொலிஸார் காரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக விளக்கம் அளித்துள்ளனர்.

பொலிஸார் நடத்திய இந்த அதிரடித் துப்பாக்கிச்சூட்டின் போது, காரின் உள்ளே தனது தாயுடன் இருந்த 1 வயது ஆண் குழந்தை மீது தோட்டாக்கள் பாய்ந்தன. தாயின் கண்முன்னே நிகழ்ந்த இந்த கொடூர சம்பவத்தில், அந்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

MOST READ

காணொளி
ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!