Header Logo

செய்திகள்
ஜப்பான் வரலாற்றுச் சாதனை: துனிசியாவை வீழ்த்தி அபார வெற்றி!

Jun 21, 2026 - 02:33 PM -

0

ஜப்பான் வரலாற்றுச் சாதனை: துனிசியாவை வீழ்த்தி அபார வெற்றி!

2026 ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்து திருவிழாவின் குரூப் 'எஃப்' (Group F) லீக் போட்டியில், துனிசியாவை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்திலேயே ஜப்பானின் தாஇச்சி காமடா (Daichi Kamada) முதல் கோலை அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

அதன்பின்னர், அதிரடியாக விளையாடிய அயாஸே உடா (Ayase Ueda) ஆட்டத்தின் 31 மற்றும் 83-வது நிமிடங்களில் இரண்டு அபாரமான கோல்களை அடித்தார். இடைப்பட்ட நேரத்தில், 69-வது நிமிடத்தில் ஜுன்யா இடோ (Junya Ito) ஒரு கோல் அடித்து ஜப்பானின் வெற்றியை உறுதி செய்தார்.

உலகக் கிண்ண வரலாற்றில் ஜப்பான் பதிவு செய்யும் மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

இந்த அதிரடி வெற்றியின் மூலம் ஜப்பான் அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், தொடர்ந்து இரண்டு தோல்விகளைச் சந்தித்த துனிசியா தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!