Jun 21, 2026 - 06:12 PM -
0
இலங்கையில் நடைபெற்ற இலங்கை, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடரில் இந்திய A அணி சேம்பியனாகியுள்ளது.
இன்று (21) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய ஏ அணிகள் மோதியிருந்தன.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை ஏ அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 377 ஓட்டங்களைப் பெற்றது.
இந்திய அணி சார்பில் வைபவ் சூரியவன்சி 29 பந்துகளில் 94 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக் கொடுத்தார்.
அவர் இந்தப் போட்டியில் 11 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றமை சர்வதேச சாதனையாக மாறியுள்ளது.
இந்நிலையில் 378 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை ஏ அணி 47.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 311 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 66 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இதன் மூலம் இந்த முத்தரப்பு தொடரின் சேம்பியன் பட்டத்தை இந்திய ஏ அணி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

