Jun 21, 2026 - 06:27 PM -
0
மகளிர் உலக கிண்ணம் இருபதுக்கு 20 தொடரின் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை மகளிர் அணி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 98 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இலங்கை மகளிர் அணியின் சார்பில் துடுப்பாட்டத்தில் நிலக்ஷிகா டி சில்வா அதிகபட்சமாக 30 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
இந்நிலையில் 99 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 16.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.

