Jun 21, 2026 - 08:25 PM -
0
சீனாவில் நடைபெற்ற 2026 ஆசிய அஞ்சலோட்ட சேம்பியன்ஷிப் போட்டியில் புதிய தேசிய சாதனை ஒன்று இன்று (21) பதிவாகியுள்ளது.
4x100 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில், போட்டித்தூரத்தை இலங்கை அணி 38.63 வினாடிகளில் நிறைவு செய்து இந்த புதிய தேசிய சாதனையை படைத்துள்ளது.
குறித்த அஞ்சலோட்ட அணியில் தினேத் வீரரத்ன, சாமோத் யோதசிங்க, சலித் பியுமால் மற்றும் மேரோன் விஜேசிங்க ஆகியோர் இலங்கை அணி சார்பில் பங்கேற்றிருந்தனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு கோல் கொஸ்டில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கை அணி 39.08 வினாடிகளில் போட்டித்தூரத்தை கடந்தமை இதுவரை சாதனையாக காணப்பட்டது.
எவ்வாறாயினும், 2026 ஆசிய அஞ்சலோட்ட சேம்பியன்ஷிப்பின் 4x400 மீட்டர் போட்டியில் இலங்கை வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
இந்தப் போட்டியில் வியட்நாம் தங்கப் பதக்கத்தையும், சீனா வௌ்ளிப் பதக்கத்தையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.

