Header Logo

செய்திகள்
5 மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானம் 11.9 சதவீதத்தால் வீழ்ச்சி

Jun 22, 2026 - 10:24 AM -

0

5 மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானம் 11.9 சதவீதத்தால் வீழ்ச்சி

இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் சுற்றுலாத்துறையின் ஊடாக ஈட்டப்பட்ட வருமானமானது கடந்த வருடத்தில் இதே காலப்பகுதியில் பெறப்பட்ட வருமானத்தை காட்டிலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 

மத்திய வங்கியின் அறிக்கையின்படி, 2026 ஜனவரி முதல் மே வரையான காலப்பகுதியில் சுற்றுலாத்துறை வருமானமாக இலங்கைக்கு 1,360 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளதாகப் பதிவாகியுள்ளது. 

இருப்பினும், 2025ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மே வரையான காலப்பகுதியில் சுற்றுலாத்துறையின் ஊடாக 1,543.1 மில்லியன் அமெரிக்க டொலர் பதிவாகியிருந்தது. 

அதற்கமைய இந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் சுற்றுலா வருமானம் 11.9% இனால் வீழ்ச்சியடைந்துள்ளது. 

அதேபோல், இந்த ஆண்டின் மே மாதத்தில் சுற்றுலா வருமானம் 155.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்படும் அதேவேளை, கடந்த ஆண்டின் மே மாதத்தில் அது 164.1 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியிருந்தது. 

இதேவேளை, 2026 ஜனவரி முதல் மே வரையான காலப்பகுதியில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பண அனுப்பலாக இலங்கைக்குக் கிடைத்த தொகை 3,909.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. 

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் வெளிநாட்டுப் பணவனுப்பல் வருமானம் 3,102.2 மில்லியன் டொலர்களாகக் காணப்பட்டது. 

அதற்கமைய இந்த ஆண்டில் வெளிநாட்டுப் பணப் பணவனுப்பல் வளர்ச்சியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

செம்மணியில் போராட்டம்!

செம்மணியில் போராட்டம்!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

title