Header Logo

சினிமா
நடிகர் பிரகாஷ் ராஜ் எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு!

Jun 22, 2026 - 10:43 AM -

0

நடிகர் பிரகாஷ் ராஜ் எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு!

நடிகர் பிரகாஷ் ராஜ் எந்த நேரத்திலும் பொலிஸாரால் கைது செய்யப்படலாம் என்கிற சூழல் உருவாகியுள்ளது. 

இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் பிரகாஷ் ராஜ். பல தசாப்தங்களாக தமிழ், தெலுங்கு என இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். விஜய்யின் ஜன நாயகன் படத்தில் நடித்துள்ள பிரகாஷ் ராஜ் தமிழில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் நடித்து வரும் அதே வேளையில் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். 

அதன்படி, கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் கர்நாடகா சென்ட்ரல் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார் நடிகர் பிரகாஷ் ராஜ். அந்த பாராளுமன்ற தேர்தலில் பிரகாஷ் ராஜ் பெற்ற வாக்குகள் 28,906. தோல்வி அடைந்தாலும் மதச்சார்பற்ற நிலையை கடைபிடித்து தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தான் பிரகாஷ் ராஜுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

அதாவது தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களிலும் பிரகாஷ் ராஜ் வாக்காளர் அடையாள அட்டை வாங்கி வைத்திருப்பதாகவும் இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு இது எதிரானது. இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி ஒரு நபருக்கு ஏதாவது ஒரு இடத்தில் மட்டுமே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்க மட்டுமே அனுமதி. 

ஆனால் பிரகாஷ் ராஜிடம் 4 வாக்காளர் அடையாள அட்டை கூறப்படுவது தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த திலீப்குமார் என்கிற வழக்கறிஞர் 2019 ஆம் ஆண்டு அல்சூர்கேட் பொலிஸ் நிலையத்தில் பிரகாஷ் ராஜ் மீது புகார் கொடுத்தார். ஆனால் இந்த புகாரில் பொலிஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இந்திய தேர்தல் ஆணையரிடம் புகார் கொடுத்தார். 

தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்காத நிலையில், பெங்களூரு 48 ஆவது கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பிரகாஷ் ராஜ் மீது நடவடிக்கை கோரி திலீப்குமார் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரணைக்கு வந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு 2 முறை சம்மன் அனுப்பப்பட்டு நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக ஜாமீன் இல்லாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதனால் பிரகாஷ் ராஜ் எப்போது வேண்டும் என்றாலும் கைது செய்யப்படலாம் என்கிற நிலை உருவாகியுள்ளது. கைதாவதில் தப்பிக்க பிரகாஷ் ராஜ் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 4 வாக்காளர் அடையாள அட்டை விவகாரம் பிரகாஷ் ராஜுக்கு புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.


MOST READ

காணொளி
கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

செம்மணியில் போராட்டம்!

செம்மணியில் போராட்டம்!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

title